Skip to main content

Posts

Showing posts with the label samayal veg & nonveg

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

சுண்டை வற்றல் மோர்க் குழம்பு

என்னென்ன தேவை? புளித்த கெட்டியான மோர் - ஒரு தம்ளர்                                      துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் புழுங்கல் அரிசி - ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூள் - சிறிதளவு வெந்தயப் பொடி (வறுத்தது) - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு எப்படிச் செய்வது?

நெல்லிக்காய் மோர்க் குழம்பு

 என்னென்ன தேவை ? நெல்லிக்காய் 3            தயிர் ஒரு கப் மஞ்சள் தூள் சிறிதளவு அரைக்க:

30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்

லட்டு தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு. செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும். குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம். கடலைப...

வெண்டைக்காய் ஸ்டஃப்டு பச்சடி மண்டி

ஸ்டஃப்டு வெண்டைக்காய் என்னென்ன தேவை? வெண்டைக்காய் - கால் கிலோ, மிளகாய் தூள் - 20 கிராம், மஞ்சள் தூள் - 5 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப,  எண்ணெய் - சிறிது. எப்படிச் செய்வது? வெண்டைக்காயை கழுவித் துடைக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது, தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.  வெண்டைக்காயை காம்பு நீக்காமல் நீளமாக வகிர்ந்து கொள்ளவும். தயாராக உள்ள மசாலாவை உள்ளே ஸ்டஃப் செய்யவும். கொஞ்சமாக எண்ணெய்  விட்டு, வெண்டைக்காய்களை நன்கு வேகும் வரை வதக்கி எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.  மிளகாய் தூளுக்குப் பதில் பச்சை மிளகாய், ஓமம்,  கொத்தமல்லித் தழை, இஞ்சி-பூண்டு விழுதுக் கலவையை ஸ்டஃப் பண்ணியும் செய்யலாம். வெண்டைக்காய் பச்சடி என்னென்ன தேவை? வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு - 6 பல், இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகுத் தூள், தனியா தூள்,  சீரகத் தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கெட்டியான தேங்காய்ப் பால் - 3 டேபிள்ஸ்பூன்,  கெட்டியான புளி...

இஞ்சி சட்னி & இஞ்சி ஸ்குவாஷ்

இஞ்சி சட்னி என்னென்ன தேவை? இஞ்சி - 25 கிராம், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய் - சிறிது, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் - தாளிக்கத்  தேவையான அளவு, வெல்லம் - ஒரு சிறு கட்டி, சாம்பார் பொடி - சிறிது, உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் சிதைக்கவும். புளியை ஊறவைத்து கரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,  உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து இஞ்சி விழுதைச் சேர்க்கவும். 1/4 கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக வைக்கவும்.  அதோடு புளிக்கரைசல், உப்பு, வெல்லம், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும். தினமும் செய்யும் தேங்காய் சட்னியில் மிளகாயுடன் இஞ்சி, கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் நல்ல மணத்துடன் இருக்கும். தேங்காயின்  கொழுப்பு உடலில் சேராது. ஜீரணமாகும். இஞ்சி ஸ்குவாஷ் என்னென்ன தேவை? இஞ்சி வேக வைத்த தண்ணீர் - அரை லிட்டர், சர்க்கரை - 1 கிலோ, சிட்ரிக் ஆசிட் - 10 கிராம், எலுமிச்சைப் பழம் - 5. எப்படிச் செய்வது? எல்லாவற்றையும் ஒன்றாகக் கொதி...

சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல்,சூப்,தயிர் சாலட்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல் என்னென்ன தேவை? வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 கப், புளிக் கரைசல் - (ஒரு எலுமிச்சை அளவு புளியிலிருந்து கரைத்தது), உப்பு, மஞ்சள் தூள் -  தேவைக்கு, துவரம் பருப்பு - வெந்தது 2 கப்.தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, நல்லெண்ணை, கடலைப் பருப்பு. எப்படிச் செய்வது? சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்துக் கொள்ளவும். புளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்த  பின் மசித்த கிழங்கு, பருப்பு வகைகளைப் போட்டு நன்கு கொதித்தபின் கீழே இறக்கி வைத்து தாளிக்கவும். சர்க்கரைவள்ளிக்  கிழங்கு  சூப் என்னென்ன தேவை? சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1, வெங்காயம் -1, ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன், துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 2 பல், கறி தூள் - 1  டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், சீரகத் தூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் - அரை கப்,  மிளகு - சிறிது, முந்திரி - அலங்கரிக்க. எப்படிச் செய்வது? சர்க்கரைவள்ளிக் கிழங்கை ஆங்காங்கே குத்தி...

எண்ணெய் பரோட்டா

எண்ணெய் பரோட்டா விருதுநகரையும் எண்ணெய் பரோட்டாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தப் பகுதியில் ஏராளமான எண்ணெய் ஆலைகள் இருப்பதாலோ என்னவோ, மற்ற ஊர்களில் கல்லில் போட்டுச் சுடுகிற பரோட்டாவை இவர்கள் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கிறார்கள். சேர்க்கப்படுகிற எண்ணெயில் சிறிய வேறுபாடுதான் என்றாலும் சுவையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்னென்ன தேவை? மைதா மாவு - 1 கிலோ தண்ணீர் - 350 மி.லி கடலை எண்ணெய் - 50 மி.லி உப்பு - தேவையான அளவு எப்படிச் செய்வது? மைதா மாவுடன் தண்ணீர், கடலை எண்ணெய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சுமார் அரை மணிநேரம் ஊறவிடவும். பின்னர் மாவைச் சிறு சிறு துண்டுகளாக்கி, வழக்கமாக பரோட்டா வீசுவதுபோல் வீச வேண்டும். பின்னர், தோசைக்கல்லின் நடுவில் எண்ணெய் ஊற்றி அது சூடாகும் வரை பரோட்டாவைக் கல்லின் ஓரப் பகுதியைச் சுற்றி அடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பரோட்டா மாவில் கலந்திருந்த தண்ணீர் வற்றிக் காய்ந்துவிடும். பின்னர், பரோட்டாவைக் கல்லின் நடுப் பகுதிக்குக் கொண்டுவந்து, எண்ணெயில் லேசாக வாட்டி பிறகு கல்லின் ஓரப் பகுதியிலேயே வேகவைக்க வேண்டும். இவ...

முருங்கைக்கீரை பருப்பு குழம்பு

முருங்கைக்கீரை பருப்பு குழம்பு என்னென்ன தேவை? முருங்கைக்கீரை - 1 கட்டு தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன் தேங்காய் - 2 சில்லு துவரம்பருப்பு - 1 டம்ளர் விளக்கெண்ணெய், மஞ்சள்தூள் - தலா 1 டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க சின்ன வெங்காயம் - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கு எப்படிச் செய்வது? முருங்கைக்கீரையை ஆய்ந்து வைக்கவும். தனியா, சீரகம், தேங்காய் இவற்றைச் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அரைக்கவும். துவரம் பருப்புடன் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய், மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பருப்பு வெந்ததும், கடையவும். பருப்பை அடுப்பில் வைத்து, அதில் சுத்தம் செய்து வைத்திருக்கிற முருங்கைக்கீரையைச் சேர்த்து வேகவிடவும். அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். சிறிதளவு நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, கொதிக்கும் கீரையில் சேர்த்து இறக்கவும்

கரண்டி ஆம்லெட்

கரண்டி ஆம்லெட் விருதுநகரின் மற்றுமொரு சிறப்பு கரண்டி ஆம்லெட். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இது நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம். என்னென்ன தேவை? முட்டை-1 சின்ன வெங்காயம் - கைப்பிடி கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத் தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பிறகு மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும். ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இதுபோன்று செய்துகொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது

பானகம்

என்னென்ன தேவை? வெல்லம் - 1/4 கிலோ, தண்ணீர் - 3 கப், ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், சுக்குத் தூள் - 1 சிட்டிகை, பச்சைக் கற்பூரம் - சிறிது, எலுமிச்சைப்பழம் - 2. எப்படிச் செய்வது?   வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டவும். ஏலக்காய் தூள், சுக்குத் தூள், பச்சைக் கற்பூரம் சேர்த்து கலக்கவும். எலுமிச்சைப் பழச்சாறை சேர்க்கவும்.

தயிர் சாதம்

என்னென்ன தேவை? பச்சரிசி - 1 கப், தண்ணீர் - 2 கப், பால் - 2 கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லித்தழை - சிறிது, தயிர் - 2 டேபிள்ஸ்பூன், வெள்ளரி துருவல் - 1/4 கப், கேரட் துருவல் - 1/4 கப். தாளிக்க... கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, முந்திரிப் பருப்பு - 10, எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு. எப்படிச் செய்வது?   அரிசியைக் களைந்து நீர், பால் சேர்த்துக் குழைய வேகவிடவும். வெந்த சாதத்தில் உப்பு, வெண்ணெய், தயிர் சேர்த்து கிளறவும். மிகவும் கெட்டியாக இருந்தால் பால் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களை தாளிக்கவும். அதை சாதத்தில் கொட்டிக் கிளறவும். கடைசியாக வெள்ளரி துருவல், கேரட் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சர்க்கரைப் பொங்கல்

என்னென்ன தேவை? பச்சரிசி - 1 கப், வெல்லம் - 2 கப், பயத்தம் பருப்பு - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, முந்திரி - 10, காய்ந்த திராட்சை - 15, தேங்காய்ப் பல் - 1/4 கப், நெய் - தேவையான அளவு, பச்சைக் கற்பூரம் - சிறிது, பால் - 2 கப், கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், ஜாதிக்காய் தூள் - 1 சிட்டிகை. எப்படிச் செய்வது?   பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி, வறுத்த பாசிப் பருப்புடன் கடலைப் பருப்பு, பால், தண்ணீருடன் குழைய பொங்கலாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் வெல்லத்துடன் நீர் சேர்த்து, கொதிக்க விட்டு வடிகட்டவும். பிறகு அதை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். இதனுடன் வெந்த பொங்கல் சேர்த்துக் கிளறவும். நெய் சேர்க்கவும். ஏலக்காய் தூள், முந்திரி, ஜாதிக்காய் தூள், காய்ந்த திராட்சை, தேங்காய் பல்லை நெய்யில் வறுத்து பொங்கலில் சேர்க்கவும். கடைசியாக பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறி இறக்கவும்.

அவியல்

அவியல் என்னென்ன தேவை? வெள்ளரிக்காய் - 200 கிராம் வழுதலங்காய் (பெங்களூர் கத்தரிக்காய்) - 200 கிராம் சேனைக்கிழங்கு - 150 கிராம் வாழைக்காய் - 1 கேரட் - 100 கொத்தரவங்காய் - 50 கிராம் புடலங்காய் - 100 கிராம் முருங்கைக் காய் - 1 பச்சை மிளகாய் - 10 கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் - 1 பூண்டு - 2 மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, சீரகம் - தேவையாள அளவு சிறிய வெங்காயம் - 3 தயிர் - 100 மி.லி தேங்காய் எண்ணெய் - 50 மி.லி எப்படிச் செய்வது? காய்கறிகள் அனைத்தையும் 2 அங்குல நீளத்துக்கு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கி, இரண்டாகப் பிளந்து கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், சிறிதளவு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் , சீரகம், பூண்டு சிறிய வெங்காயம், கறிவேப்பிலை இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகள் அனைத்தையும் 2 அங்குல நீளத்துக்கு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கி, இரண்டாகப் பிளந்து கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், சிறிதளவு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் , சீரக...

மட்டன் பெப்பர் ஃப்ரை

                            பெரும்பாலான நபர்களுக்கு சிக்கனை விட மட்டன் ரொம்ப பிடிக்கும், அதுவும் ஆந்திரா ஸ்டைலில் காரசாரமா சாப்பிடணும் என்றால் சொல்லவா வேண்டும். இதோ ஆந்திரா ஸ்டைல் மட்டன் பெப்பர் ஃப்ரை ரெசிபி செய்முறை விளக்கத்துடன் தேவையான பொருட்கள் மட்டன் - 500 கிராம் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 3 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் தக்காளி - 2 (நறுக்கியது) மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகு தூள் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் அரைப்பதற்கு சோம்பு - 1/2 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் கசகசா - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 2-4 செய்முறை முதலில் சுத்தமான நீரில் மட்டனை கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு மட்டனை குக்கரில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும். இதற்குள் அரைக்கு கொடுத்துள்ள பொருட்களை அரைத...

சுக்கு தோசை

என்னென்ன தேவை? பச்சரிசி - 1 கப், புழுங்கல் அரிசி - 1 கப், சுக்குத்தூள் - 2 டீஸ்பூன், முழு உளுத்தம் பருப்பு - 1 கப், கெட்டித் தயிர் - 1 கப், உப்பு - தேவைக்கு, மிளகு,  சீரகத்தூள் - 2 டீஸ்பூன் எப்படிச் செய்வது?   உளுத்தம் பருப்பு, அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு, தயிர் சேர்த்துப் புளிக்க விடவும். தோசையாக  ஊற்றுவதற்கு முன் மாவில் சுக்குத்தூள், மிளகு, சீரகத்தூள் கலந்து கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காயவிட்டு மாவை ஊற்றி  வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.

வெங்காய சட்னி,ரசம்,பக்கோடா.

வெங்காய சட்னி வெங்காயத்தை தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், காய்ந்த மிளகாய்(3 அல்லது 4), புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனை போக வேண்டும். நன்கு சுருள வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். வெங்காய சட்னி தயார். வெங்காய ரசம் முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு மிளகு, சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின்பு அதில் புளியை நன்கு கரைத்து ஊற்றவும். பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகு, சீரக தூள், உப்பு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். வெங்காய பக்கோடா ஒரு பாத்திரத்தில் கடலை மாவு(ஒரு கப்), அரிசி மாவு(கால் கப்), மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு, சோம்பு...

வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் மிளகு வறுவல், தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 1, மஞ்சள் தூள் 1 சிட்டிகை, மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, கடுகு - 1 டீஸ்பூன், அரைப்பதற்கு தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி - 1/2 இன்ச், பூண்டு - 4-5, மிளகு - 2-3 டீஸ்பூன் செய்முறை: முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சற்று நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நீரில் போட்டு பாதியாக வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 3 நிமிடம் கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூட...

அய்யங்கார் ஸ்பெஷல் புளியோதரை

படங்கள்- ம.பிரபு" class="main-image" src="http://tamil.thehindu.com/multimedia/dynamic/02038/1_2038834h.jpg" title="புளியோதரை படங்கள்- ம.பிரபு" /> என்னென்ன தேவை? புளி - சிறிய கமலா ஆரஞ்சு சைஸில் உப்பு - தேவையான அளவு மிளகாய் வற்றல் - 10, 12 வெந்தயம் - 1 ஸ்பூன் விரலி மஞ்சள் - 2 பெருங்காயக் கட்டி - சுண்டைக்காய் அளவு (சிறு துண்டு) உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன் கடலைப் பருப்பு - 3 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - கொஞ்சம் எண்ணெய் - கால் கப் எப்படிச் செய்வது? சுடுதண்ணீரில் புளியையும் உப்பையும் ஊற வைத்துக் கொள்ளவும் (தண்ணீர் 300 மி.லி.). கெட்டியான கரைசலாகக் கரைத்து வடிகட்டி எடுக்கவும். கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு வெந்தயம், மஞ்சள், கொஞ்சம் பெருங்காயத்தை வறுத்து எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய்விட்டு மிளகாயைக் கிள்ளிப் போட்டு வறுக்கவும். புளிக் கரைசலை விடவும். கொதித்து வரும்போது பொடியைப் போட்டுக் கிளறவும், தீ குறைவாக இருக்கட்டும். நன்கு கொதித்துப் பாதியாகச் சுண்டி வரும்போது கடாயில் எண்ணெய்விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் ...