என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்,
தண்ணீர் - 2 கப், பால் - 2 கப்,
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லித்தழை - சிறிது,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
வெள்ளரி துருவல் - 1/4 கப்,
கேரட் துருவல் - 1/4 கப்.
தாளிக்க...
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
முந்திரிப் பருப்பு - 10,
எண்ணெய் - தாளிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசியைக்
களைந்து நீர், பால் சேர்த்துக் குழைய வேகவிடவும். வெந்த சாதத்தில் உப்பு,
வெண்ணெய், தயிர் சேர்த்து கிளறவும். மிகவும் கெட்டியாக இருந்தால் பால்
சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களை
தாளிக்கவும். அதை சாதத்தில் கொட்டிக் கிளறவும். கடைசியாக வெள்ளரி துருவல்,
கேரட் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Comments
Post a Comment