வெங்காய சட்னி
வெங்காயத்தை தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், காய்ந்த மிளகாய்(3 அல்லது 4), புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனை போக வேண்டும்.
நன்கு சுருள வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். வெங்காய சட்னி தயார்.
வெங்காய ரசம்
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு மிளகு, சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வதக்கிய பின்பு அதில் புளியை நன்கு கரைத்து ஊற்றவும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகு, சீரக தூள், உப்பு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
வெங்காய பக்கோடா
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு(ஒரு கப்), அரிசி மாவு(கால் கப்), மிளகாய்
தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு, சோம்பு, கரம் மசாலா தூள் சேர்த்து
கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் நீளமாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீரை தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் வெங்காயக்
கலவையை எடுத்து உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
Comments
Post a Comment