Skip to main content

Posts

Showing posts with the label Generalknowledge

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான பொது அறிவு தகவல்கள்...!

* ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும். * புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும். * யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர முடியும். * ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம். * கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதை போல, நாய்களின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம். * எறும்புகள் தூங்குவதே இல்லை.

பொது அறிவு தகவல்கள்...!

1) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம். 2) உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது. 3) உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி. 4) உலகின் மிகப் பெரிய அணை அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை. 5) உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிகோ வளைகுடா. 6) உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு இந்தியா. 7) உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன. 8) உலகின் மிகப் பெரிய பூங்கா ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.

தெரிந்து கொள்ளுங்கள் 2

                    >கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும். >யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம். >கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் >மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம். >1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான். >ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு. >வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். >ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள். >பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம்பேசியுள்ளார்.

நம்பினால் நம்புங்கள்! 30

*குரங்குகளால் பேச முடியாவிட்டாலும், சத்தம் மற்றும் உடலசைவுகளைப் பயன்படுத்தி, தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். *இசபெல் டினோயர் என்ற பெண்ணுக்கு 2005ம் ஆண்டு நவம்பரில் செய்யப்பட்டதுதான் உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை. ஒரு நாய் கடித்ததால் முகமே அற்றுப் போன அந்தப் பெண்ணுக்கு, புதிய திசுக்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்காக சக்தி வாய்ந்த மருந்துகள் அளிக்கப்பட்டன. *நமது பிரபஞ்சத்தின் அண்டை வீட்டுக்காரரான ஆண்ட்ரோமேடா கேலக்சி, நமது பால்வழி மண்டலத்தைப் போல இரு மடங்கு பெரியது. அதில் ஒரு ட்ரில்லியன் நட்சத்திரங்கள் இருக்கக்கூடும். *அற்புதமான விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு, யூரி காகரின் ஒரு பயிற்சி விமான விபத்தில் இறந்து போனார். *அமெரிக்காவிலுள்ள ஹண்ட்ஸ்வில்லி ஸ்பேஸ் மியூசியத்தில், பார்வையாளர்களும் ஒரிஜினல் உபகரணங்களைப் பயன்படுத்தி விண்வெளிப் பயிற்சி மேற்கொள்ளலாம். *விண்வெளிக்கு லிஃப்ட் மூலம் செல்லும் கனவுத் திட்டத்துக்காக, ஓர் அமெரிக்க நிறுவனம் உழைத்துக் கொண்டிருக்கிறது. *பெண்களை விட ஆண்கள் சற்று உயரமாக இருப்பது பரிணாம வளர்ச்சிப்படியே ஏற்பட்டிருக்கிறத...

நம்பினால் நம்புங்கள் 29

1. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்து எது? -கொழுப்பு 2. உலோகமில்லாத கனிமங்களில் மூன்று? -மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல் 3. மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை? -நகங்கள், மேல்தோல், ரோமங்கள் 4. மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்? -அயனிச் சேர்மங்கள் 5. மின்சார டைனமோவைக் கண்டு பிடித்தவர் யார்? -ஹிப்போலைட் பிக்ஸி 6. வீட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்? -இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்) 7. புல் இயல் (Agrostology) என்பது என்ன? -புல், தாவரங்கள் பற்றிய அறிவியல் 8. புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை? -உணர்ச்சி நரம்புகள் 9. வாயு மூலக்கூறுகள் ஓய்வு நிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன? -தனிவெப்பநிலை 10. பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை? -குரோமோசோம்கள் 11. உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது? -இழைக்கண்ணாடி 12. சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை? -கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம் 13. பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்? -மந்த வாயுக்கள் 14. நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன...

நம்பினால் நம்புங்கள்! 28

*தூசுகளையும் அழுக்குகளையும் விரட்டி விலகச் செய்யும் புதுமையான பெயின்ட்டை ஜப்பானின் நிஸான் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘அல்ட்ரா-எவர் ட்ரை’ என்றழைக்கப்படும் இந்த சூப்பர்-ஹைட்ரோபோபிக் பெயின்ட் எல்லா கார்களிலும் பூசப்பட்டால், கார் வாஷ் செய்பவர்கள் வேறு வேலை தேட வேண்டியிருக்கும்! *மனிதத் தலைமுடியை விட ஒரு லட்சம் மடங்கு மெலிதான சூப்பர் மெட்டீரியலை ஸ்வீடன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதைக் கொண்டு, மிக மிக மிக எடை குறைவான வாட்டர்    புரூஃப் துணிகளைத் தயாரிக்கலாம். *பெரிய அளவிலான கேஸ் கசிவைத் தடுக்க பாக்டீரியாக்களைப் பயன்படுத்தலாம் என ஈஸ்ட் ஏஞ்சலியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். *மனித சருமத்தின் வெளிப்புறத்தோலை (எபிடெர்மிஸ்), ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி, செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் லண்டன் கிங்ஸ் காலேஜ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ மெடிக்கல் சென்டர் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதன் மூலம் பல்வேறு சருமக் குறைபாடுகளுக்குத் தீர்வு கிடைக்கும். *ஹெச்.டி., டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் எல்லாம் பழசாகும் காலம் மிக விரைவிலேயே தென்படுகிறது. பனிப் புகையிலேயே 3டி உருவங்க...

நம்பினால் நம்புங்கள் 27

*ஒரு டால்பினுக்கு உடல்நிலை சரியில்லா விட்டால், மற்ற டால்பின்கள் அதை மேலே தள்ளி, கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து, எளிதாகச் சுவாசிக்க உதவி செய்யும். *டால்பின் தினம் 8 மணி நேரம் வரை உறங்கும். ஆனாலும், அதன் மூளையில் பாதி மட்டுமே ஒரு நேரத்தில் உறங்கும். அதனால் டால்பின் ஒருபோதும் நினைவிழப்பதில்லை! *மனிதர்களுக்கும் டால்பின்களுக்கும் தகவல்தொடர்பு ஏற்படுத்த, இப்போது ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் பொருள், ஐபேட்! *சில வகை டால்பின்கள் தேங்காய்களை பந்து போல கேட்ச் பிடித்து விளையாடும். *தண்ணீருக்கு அடியில் எளிதாகச் சென்று இரை தேட, டால்பின்களுக்கு ஸ்பெஷலான சூப்பர் சக்தி உண்டு. எகோலொகேஷன் என்ற சோனார் வகையை இதற்காக அவை பயன்படுத்துகின்றன. *டால்பின்களுக்கு வாழ்நாள் முழுக்கவே ஒரு செட் பற்கள் மட்டுமே முளைக்கும். *முதன்முதலாக ஒரு பிங்க் வண்ண பாட்டில்நோஸ் டால்பின் அமெரிக்காவிலுள்ள லூசியானா ஏரியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. *ரிஸ்ஸோ டால்பின்களால் 30 நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் இருக்க முடியும். *‘கில்லர் வேல்ஸ்’ என்று அழைக்கப்படுபவை, கொலைகாரத் திமிங்கலங்கள் அல்ல... உண்மையில் அவை ஒருவகை டால்பின்களே! *ஒவ்வொ...

நம்பினால் நம்புங்கள் 26

*நிலநடுக்கோட்டுப் பகுதியில் பருவ கால மாற்றமே கிடையாது. ஆண்டு முழுவதும் ஒரே வெப்பம் வெப்பம் வெப்பமே! *சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வேகம் நிலையாக இருப்பதில்லை. அதன் சுற்றுப்பாதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகம்! *சூரிய மண்டலத்தின் மிகச் சிறிய நிலவு, செவ்வாயிலுள்ள டைமோஸ். இதன் குறுக்களவு 13 கிலோமீட்டரை விடக் குறைவுதான். சில மணி நேரங்களில் நடந்தே கடந்து விடலாம்! *கருங்கடல், மஞ்சள் கடல், செங்கடல், வெண் கடல் என்  பெயர்களில் இருந்தாலும், இவை அனைத்தும் மற்ற கடல்களைப் போல நீலம் அல்லது நீலப்பச்சையாகவே காட்சியளிக்கின்றன! *ஒரே ஒரு சூரியப்புள்ளி (சன்ஸ்பாட்) மட்டுமே 3 லட்சம் கிலோமீட்டர் நீளம் வரை இருக்கும்! *ஒவ்வொரு நாளும் சுமார் 7.5 கோடி எரிகற்கள் நமது வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. ஆனால், ஒன்றோ, இரண்டோ மட்டும்தான் தரையை அடைகின்றன. *பல்சார் என்ற துடிப்பு விண்மீன்கள் வானில் சுழலும் வேகம் மிக அதிகம். பொதுவாக ஒரு வினாடிக்குள்ளாகவே அவை சுழன்று முடித்து விடும். அதிவேகம் கொண்ட ஒரு பல்சார், ஒவ்வொரு வினாடியும் 200 முறை சுழலும்! *சந்திர கிரகணம் 104 நிமிடங்களைத் தாண்டி நீடிப்பதில்லை! *சஹாரா ப...

நம்பினால் நம்புங்கள் 25

*ஒரு மியூசியத்தில் ‘கோலியாத் பீட்டில்’ என்ற வண்டுக்கு வாழைப்பழம் அளிக்கப்பட்டது. தன்னுடைய கொம்புகளாலேயே தோலை உரித்துவிட்டு, பழத்தைத் தின்று முடித்தது அவ்வண்டு! *காண்டர் என்ற சிறப்புப் பறவையானது, ஒருமுறை தென் அமெரிக்காவில் 20 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தோடு மோதியிருக்கிறது! *பாராசூட் வீரர்கள் பூமியில் குதிக்கும் அதிகபட்ச உயரம் 30.5 கிலோமீட்டர்! *தகர (டின்) டப்பாக்கள் முழுக்க முழுக்க தகரத்தினால் மட்டுமே செய்யப்பட்டவை அல்ல! *ஒரு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அதன் வயிற்றில் 267 கூழாங்கற்கள் காணப்பட்டன! *உலகில் ஒவ்வொரு நாளும் விமானப் பயணங்களின்போது 70 ஆயிரம் பேக்கேஜ்கள் தொலைகின்றன. *30 அடி நீளமுள்ள சுறாவின் வயிற்றில், ஒருமுறை 50 கிலோ எடையுடைய கடல் சிங்கம் காணப்பட்டது! *ஃபிளாட்ஃபிஷ் என்ற மீன்வகை சுற்றுப்புறத்துக்கேற்ப தன் உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்! *நல்ல பார்வைத்திறன் உடையவர்களால் ஒரு மைல் தூரத்தில் (1.6 கி.மீ.) உள்ளவரையும் முக அடையாளம் காண முடியும்! *1948ல்தான் கடைசி வைட்டமின் கண்டறியப்பட்டது. அது பி12! ...

நம்பினால் நம்புங்கள் 24

*ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை உருவாக்க 44 ஆண்டுகள் ஆனது. *சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரே வினாடியில் 3.6 கோடி செயல்களைச் செய்யும் திறன் கொண்டவை! *ஜப்பானிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் சாலை, ரயில் என இருவகை போக்குவரத்துமே உண்டு. மொத்த நீளம் 54 கிலோ மீட்டர்! *சுவிட்சர்லாந்தில் பாலாடைக்கட்டிகள் துளைகளுடன் கூடிய சக்கரங்கள் போல தயாரிக்கப்படுகின்றன. இந்த சுவிஸ் சீஸ் 100 கிலோ எடையுள்ள சக்கரங்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. *சில ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஒரே வினாடி யில் இரண்டு நகல்களை வெளித் தள்ளும் அளவு வேகம் கொண்டவை. *கடிகாரங்களில் உள்ள ஸ்க்ரூக்கள் மிகமிகச் சிறியவை. நம் உள்ளங்கையிலேயே 30 ஆயிரம்  ஸ்க்ரூக்களை ஏந்திவிடலாம்! *4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீர் பானம் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், பாபிலோனின் பண்டைய கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. *ஃபிலிம் பயன்படுத்தப்பட்ட காலத்தில், புகைப்படத் துறை ஆபரணக் கடைகள், நாணயத் தயாரிப்புத் துறையை விடவும் அதிக வெள்ளியைப் பயன்படுத்தியது. *தேநீரில் 2 ஆயிரத்துக்கும் அதிக வெவ்வேறு விதமான கலப்பு வகைகள் (பிளெண்ட்) உள்ளன. *பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் சுதந்திர தேவி...

நம்பினால் நம்புங்கள் 23

*4 லிட்டருக்கும் குறைவான எரிபொருளில் 350 கிலோமீட்டர் பயணிக்கக்கூடிய   Urbee   2 என்ற கார் ஆராய்ச்சிக்கட்டத்தில் உள்ளது. இது 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தில் உருவானது! *நாம் அறிந்த வரையில், மிகத் தொலைவிலுள்ள கேலக்சியிலிருந்து வெளிப்படும் ஒளி நம்மை அடைய 13.1 பில்லியன் ஆண்டுகள் பிடிக்கும். பெருவெடிப்பு நிகழ்ந்து, 700 மில்லியன் ஆண்டுகள் ஆன பிறகே, இந்த ஒளி உமிழல் தொடங்கியது! *தென் ஆப்ரிக்காவில் பிறந்து, கனடா-அமெரிக்காவின் பிசினஸ் மேக்னட்டாகத் திகழும் எலோன் மஸ்க் உலகின் அதிவேக போக்குவரத்துத் திட்டத்துக்கான ஐடியா வைத்திருக்கிறார். அதன் பெயர் ஹைபர்லூப். கேப்ஸ்யூல் போன்ற ட்யூப்களில் அமர வைக்கப்படும் பயணிகள் மணிக்கு 1,223 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்படுவார்கள். இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால், சென்னையிலிருந்து மதுரையை அரை மணி நேரத்துக்குள் அடைந்து விடலாம்! *29.6 காரட் எடை கொண்ட மிக அரிதான நீல வைரம், சமீபத்தில் தென் ஆப்ரிக்காவின் குல்லினன் சுரங்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு காரட் என்பது 0.2 கிராம். *2013ல், லண்டன் கழிவுநீர் குழாய் அமைப்பில் மிகப்பெரிய அடைப்பு ஏற்பட்டது...

நம்பினால் நம்புங்கள் 22

*1964ல் நார்வேயின் ஆஸ்லோ நகரத்தில், 20 ஆயிரம் கருவிகளைப் பயன்படுத்தி, உலகின் மிகப் பிரமாண்டமான ஆர்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. *சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை, சீனப்பெண்கள் கத்தரிச் செடியிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணப்பூச்சைப் பயன்படுத்தி, பற்களை கறுப்பாக்கிக் கொண்டனர்! *பிஷப் நாற்காலிக்கு லத்தீன் மொழியில் ‘கதீட்ரா’ என்று பெயர். அதனால்தான் இன்றும் பல தேவாலயங்கள் ‘கதீட்ரல்’ என்று அழைக்கப்படுகின்றன. *1664ல் ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட 10 டாலர் நாணயங்கள் ஒவ்வொன்றும் 19.5 கிலோ எடை இருந்தது! *மற்ற எந்த உணவையும் விட அமெரிக்கர்கள் அதிக அளவு எடுத்துக்கொள்வது பால்தான். சராசரியாக ஆண்டுக்கு 132 கிலோ/ஒருவருக்கு! *இதுவரை ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட தொப்பி நெப்போலியன் அணிந்ததுதான். 1970ல் 17 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்! *ஆங்கில எழுத்துகளிலேயே மிகப்பழமையானது  ‘ o’.   3 ஆயிரம் ஆண்டுகளாகவே இந்த எழுத்து எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. ஓ போடு! *70 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் இப்போது இருப்பதை விடவும் மிக அதிக செய்தித்தாள்கள் (2,461) வெளிவந்தன. இப்போது 1,700க்கும் கு...

நம் உடலை பற்றி அறிவோம்:-

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும். மரணத்த...

நம்பினால் நம்புங்கள் 21

*பறந்து கொண்டிருக்கும் ஒரு சோப்புக்குமிழி வெடிக்கும் தருணம் ஆயிரத்தில் ஒரு நொடிக்குள் அமைந்து விடுகிறது. *மேக மூட்டமுள்ள ஒரு நாளில் சூரியனின் 70 சதவீத கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. *அமெரிக்காவில் 2012ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் 30 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. 1930க்குப் பிறகு, இதுதான் அங்கு மிகப்பெரிய வறட்சியாம். இந்தியாவில் ஏற்படும் பஞ்சங்களும் வறட்சிகளும் இதைவிடப் பல மடங்கு தீவிரமானவை! *உலகின் முதல் நீராவி எஞ்சின் 1804ல் இயங்கியபோது, அதன் சராசரி வேகம் மணிக்கு 3.9 கிலோமீட்டர். இப்போதைய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில்களின் வேகத்தோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள்! *உலகில் 2030ம் ஆண்டில், நீர்ச் சேவைகளைப் பராமரிக்க 537 பில்லியன் டாலர் தேவைப்படும்... அப்போது நீர்வளம் இருந்தால்! *கேவியர் வகை மீன்களும் அதன் முட்டைகளும் ரகசிய அறைகளில் ரகசியமான முறையில் பாதுகாக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. காரணம், அதன் நம்பமுடியாத விலை! ஒரு காலத்தில் இவை இலவசமாகவே வழங்கப்பட்டன என்பது இன்னொரு ஆச்சரியம்! *நறுமணப் பொருட்களைத் தேடிச் சென்றபோதுதான், ஐரோப்பியர்கள் தூரக் கிழக்கு நாடுகளைக் ...

நம்பினால் நம்புங்கள் 20

*பெரும்பாலான மால்ட் சத்து பானங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக சர்க்கரையே உள்ளது. *டீசல் கார்களை மாதம் 2 ஆயிரம் கிலோமீட்டர் பயன் படுத்துபவர்கள், பெட்ரோல் கார்களை விட ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இக்கணக்கீட்டின்படி, டீசல் கார் வாங்குவதற்கு கூடுதலாகச் செலவிட்ட தொகையை 2 ஆண்டுகளில் மீட்டுவிட முடியும்! *பதப்படுத்தப்படும் உணவுப்பொருட்கள், அவற்றின் 20 சதவீத ஊட்டச்சத்தை இழந்து விடுகின்றன. *அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்கிறவர்களுக்கு, வயிற்றின் காப்பு உறை பாதிக்கப்பட்டு, கேன்சர் ஏற்படும் அபாயம் உண்டு. *மகாராஷ்டிர மாநிலத்தில் பெர்மிட் இல்லாமல் மது அருந்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. *ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கப்படும் பொருளில் குறைபாடு இருப்பின், 30 நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்து, முழுப்பணத்தையும் திரும்பப் பெறும் வசதியை, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா அளித்துள்ளது. *ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கப்படும் பொருளில் குறைபாடு இருப்பின், 30 நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்து, முழுப்பணத்தையும் திரும்பப் பெறும் வசதியை, நுகர்வோர் பாதுகாப்பு மசோ...

நம்பினால் நம்புங்கள் 19

*கேவியர் எனும் முட்டைகள், உலகின் காஸ்ட்லி உணவுகளில் குறிப்பிடத்தக்கது. ஜெயின்ட் ஸ்டர்ஜியன் மீன் வகையானது, வாழ்நாளில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக கேவியர் முட்டைகளை இடும். *நம்பர் பூட்டுகள் ஒவ்வொன்றுக்கும், 10 லட்சத்துக்கும் அதிக காம்பினேஷன்கள் உண்டு. *அமெரிக்க மக்களில் மூன்றில் 2 பங்கினர் கண்ணாடி அணியும் நிலைக்கு ஆளாகின்றனர். *உலகின் மிகப்பெரிய ஒற்றைச் சக்கர சைக்கிளான ‘யுனி சைக்கிள்’, 32 அடி உயரம் கொண்டது. *டிஜிட்டல் கேமராக்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து, வெள்ளிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தால், புகைப்படக்கலையே அழிந்திருக்கும்! *9 ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடை கொண்ட ஒற்றை மார்பிள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இதுவே இதுவரை கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய மார்பிள். *இப்போதும் செயல்படும் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான மொராக்கோ ஃபெஷ், கி.பி. 859ல் தொடங்கப்பட்டது. *அமெரிக்க தேவாலயங்களில் முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட மது வகைகளே, உலகில் அதிக வீரிய மதுவாக இருந்தது. அது 190 புரூஃப் அல்லது 95 சதவீத சுத்தமான ஆல்கஹால்! பொதுவாக விற்பனையிலுள்ள மதுவகைகளில் 42.8 சதவீத ஆல்கஹால் (75 புரூஃப...

நம்பினால் நம்புங்கள் 18

*கடல் முள்ளெலிகள்  (sea hedgehogs)  ஒரு அடி நீளத்துக்கும் குறைவான அளவே இருந்தாலும், 20 அடி நீளமுள்ள சுறாவையும் கொல்லும் திறன் மிக்கவை. *மத்திய காலகட்டத்தின் பிற்பகுதியில் கண் கண்ணாடிகள் ஆபரணமாகவே கருதப்பட்டன. கூடையில் சுமந்து தெருக்களில் விற்பனை செய்வதும் நடந்தது. *1960ல் ஏற்பட்ட ஒரே ஒரு நிலநடுக்கத்தால் வெகுதொலைவில் உள்ள இரு நாடுகளில் கூட (ஜப்பான், சிலி), சுனாமி உருவானது. *Tahltan Bear Dog...  இதுதான் உலகில் மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் காணப்பட்ட நாய் இனம். சில ஆண்டுகளுக்கு முன் மூன்றே மூன்று என நாய்த்தொகை கொண்ட இவ்வினம் இப்போது இருப்பது ஐயமே! *பனிப்பாறைகள் இதுவரை அதிகபட்சமாக நீர்மட்டத்திலிருந்து 550 அடி உயரம் வரை உருவாகியுள்ளது. கடல் அடிமட்டத்திலிருந்து கணக்கிட்டாலோ, 4,950 அடி உயரம்! *எந்த ஒரு ஆண்டிலும், மூன்றுக்கு அதிக சந்திர கிரகணங்கள் நிகழ்வதில்லை. சில ஆண்டுகளில் நிகழ்வதே இல்லை! *ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு இன்ச் மழை பொழிந்ததை எடை போட முடிந்தால், 113 டன் தண்ணீர் கிடைத் திருக்கும்! *கடலலைகள் பொதுவாக 50 அடி உயரம் வரை எழுவதுண்டு. அதிகபட்சமாக ஒருமுறை 112 அடி எழுந்ததையும்...

சில இனிய தகவல்கள்

---------------------------------------- நாம் உண்ணும் சாதம் செரிக்க ஒரு மணி நேரம் ஆகிறது. பால் செரிக்க இரண்டு மணி நேரம் ஆகிறது. நெய் ,வேக அவித்த முட்டை,மாமிசம் செரிக்க நான்கு மணி நேரம் ஆகிறது. ******** மது அருந்தினால் சிலருக்கு தைரியம் வரும். அதற்கு Dutch courage என்று பெயர். ******** இப்போது உலகமெங்கும் உபயோகப் படுத்தப் படும் காலண்டருக்கு கிரிகேரியன் காலண்டர் என்று பெயர். இது 1582ல் இத்தாலியில் போப் கிரிகேரி13 என்பவரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது. ******** உலகம் தோன்றியது முதல் எந்தவித பரிணாம வளர்ச்சியும் இல்லாத உயிரினம் கரப்பான் பூச்சி. ******** நிறக்குருடு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் வித்தியாசப் படுத்தி சொல்ல முடியாது. ******** ஒரு பிராணியைப் பார்த்தவுடன் அதன் காது வெளியே தெரிந்தால் அது குட்டி போடும் என்றும் காது வெளியே தெரியவில்லை என்றால் அது முட்டையிடும் என்றும் அறியலாம். ********** கிரேக்க நாட்டில் யூரல் மலைப் பகுதியில் 'ஆஸ்பெட்டாஸ்'என்ற நகரம் உள்ளது.இந்த நகரம் கல் நார் எடுக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது. இந்த நகரின் பெயராலேயே கல்நாருக்க...

நம்பினால் நம்புங்கள் 17

*பழைய மொபைல் போன்களை சூரிய ஆற்றலில் இயங்கக்கூடிய மைக்ரோபோன்களாக மாற்றி, மரம் வெட்டுபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கச் செய்ய முடியும். இம்முறையை அமெரிக்க இயற்பியலாளர் டாபர் ஒயிட் கண்டுபிடித்துள்ளார். *மனித மூளையின் சிந்தனையை சுற்றுப்புற வாசனை மற்றும் ஒலிகள் மூலம் புரிந்துகொண்டு தகவல் அனுப்பும் மைக்ரோ சிப் கண்டறியப்பட்டுள்ளது. *உலகில் ஆண்டுதோறும், 5.6 ட்ரில்லியன் சிகரெட் துண்டுகள் எறியப்படுகின்றன. இவற்றை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக் கார், டர்பைன் ஆகியவற்றின் பாகங்களுக்குப் பயன்படுத்துவது பற்றிய விசித்திர ஆராய்ச்சியில் தென் கொரிய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். *6 தலைமுறைகளாக மாற்றம் அடைந்தே, வண்ணத்துப்பூச்சி இறகுகளின் பழுப்பு வண்ணம் பர்பிளாக உருமாறியுள்ளது. *முதன்முதலாக ஒரு வால் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்காக ஒரு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. ரோஸாட்டா என்ற அந்த விண்கலம் சமீபத்தில் தரையிறங்கியது. *ஊர்வன இனத்தின் பத்தாயிரமாவது வகை சமீபத்தில் அறியப்பட்டுள்ளது. பறவைகள், மீன்களிலும் இதே அளவு வகைகள் உள்ளன. *செம்மறியாடு, வெள்ளாடு கலந்த கலவையாக இனவிருத்தி செய்யப்பட்ட புது...

தெரிந்து கொள்ளுங்கள்.

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது" 2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு" 3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER" 4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும் நீண்ட வார்த்தை 'Stewardesses" 5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு” 6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister" 7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால் 12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும். 8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்" 9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. 10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி" 11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" என்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்...