ஆனந்தும், சுந்தரும் கல்லூரி தோழர்கள். ஆனந்துக்கு காதல் என்றால் எல்லையில்லா ஆனந்தம். சுந்தருக்கோ இந்த வார்த்தை சுத்தமாக பிடிக்காது. சுந்தரை சந்திக்கும் போதெல்லாம் ஆனந்த், தன்னுடைய காதல் குறித்து மகிழ்ந்து பேசுவான். மச்சான், ‘மிருதுளா என் தேவதை. அந்தி சாயும் அந்த மாலைப் பொழுதில், அர்த்தனாரீஸ்வரர் கோயில் வாசலில் அவளை பார்த்த அந்த நாளை, எந்த நாளும் என்னால் மறக்க முடியாது. அவள் மட்டும் என் அருகில் இருந்தால் போதும். இந்த பூமியில் வேறு எதுவும் எனக்கு தேவையில்லை. என் உயிருக்கு மேலாக அவளை நேசிக்கிறேன்.’’ இது சுந்தரை பார்க்கும் போதெல்லாம் ஆனந்தின் உதடுகளிலிருந்து உணர்ச்சி பெருக்கோடு வெளியேறும் வார்த்தைகள். ஆனந்தின் காதல் பேச்சுக்கு சுந்தர் எப்போதுமே செவி சாய்ப்பதில்லை. சில நேரங்களில் கடுப்பாகும் ஆனந்த், ‘‘காதல் என்றால் என்னவென்று தெரியாத நீயெல்லாம் ஒரு மனுசன், உங்கிட்ட போய் என் காதல் கதையை சொன்னேன் பார்’’ என்று சுந்தரிடம் அலுத்துக் கொள்வான். அன்றைய தினம் அதிகாலை நேரத்தில் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் சுந்தர். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டு எழுந்தான். அதற்குள் அவனது த...