என்னென்ன தேவை?
வெண்டைக்காய்
- கால் கிலோ, மிளகாய் தூள் - 20 கிராம், மஞ்சள் தூள் - 5 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் -
சிறிது.
எப்படிச் செய்வது?
வெண்டைக்காயை
கழுவித் துடைக்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி-பூண்டு விழுது,
தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். வெண்டைக்காயை காம்பு நீக்காமல்
நீளமாக வகிர்ந்து கொள்ளவும். தயாராக உள்ள மசாலாவை உள்ளே ஸ்டஃப் செய்யவும்.
கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வெண்டைக்காய்களை நன்கு வேகும் வரை வதக்கி
எடுக்கவும். சூடாகப் பரிமாறவும். மிளகாய் தூளுக்குப் பதில் பச்சை மிளகாய்,
ஓமம், கொத்தமல்லித் தழை, இஞ்சி-பூண்டு விழுதுக் கலவையை ஸ்டஃப் பண்ணியும்
செய்யலாம்.
வெண்டைக்காய் பச்சடி
என்னென்ன தேவை?
வெண்டைக்காய்
- கால் கிலோ, வெங்காயம் - 1, தக்காளி - 1, பூண்டு - 6 பல், இஞ்சி-பூண்டு
விழுது - அரை டீஸ்பூன், மிளகுத் தூள், தனியா தூள், சீரகத் தூள் - தலா அரை
டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கெட்டியான தேங்காய்ப் பால் - 3 டேபிள்ஸ்பூன், கெட்டியான புளிக்கரைசல் - 1
டேபிள் ஸ்பூன், வெல்லத்தூள் - 1 டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை -
தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில்
எண்ணெய் சூடாக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு,
கறிவேப்பிலை தாளிக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பொன்னிற
மாகும் வரை வதக்கவும். மிளகாய் தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம்
வதக்கவும். நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். தேங்காய்ப் பால்,
புளிக்கரைசல், மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் ஆகிய
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். அதை வெண்டைக்காய் கலவையில் விடவும்.
உப்பும் வெல்லமும் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைத்து
இறக்கவும்.
புலாவ், பிரியாணிக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது.
வெண்டைக்காய் மண்டி
என்னென்ன தேவை?
எண்ணெய்
- அரை கப், தாளிப்பதற்கு- கடுகு, சீரகம், உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
சாம்பார் வெங்காயம் - ஒரு கப், வெண்டைக்காய் - 1/2 கிலோ, தக்காளி - 2
பெரியது, கறிவேப்பிலை - ஒரு பிடி, பூண்டு - 6 பல், தனியா தூள், சீரகத்
தூள், மிளகாய் தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், அரிசி
மாவு - 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளி - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
எண்ணெய்
காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு
வெங்காயத்தை வதக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, பூண்டு சேர்ந்து
வதங்கியவுடன் நீளநீளமாக நறுக்கிய வெண்டைக்காய் போட்டு வதக்கவும். பின்
மசாலா தூள்களைச் சேர்த்து பொடி வாசனை போனபின், தக்காளியைச் சேர்த்து
வதக்கி உப்புப் போட்டு கடைசியில் புளித் தண்ணீரையும் சேர்க்கவும். நிறைய
தண்ணீர் சேர்க்க வேண்டாம். தளதளவென்று கொதி வந்தவுடன் அரிசி மாவைத்
தண்ணீருடன் கலந்து கொதிக்கும் மண்டியில் விடவும். கெட்டியானவுடன் இறக்கிப்
பரிமாறவும். இது இட்லி, தோசை, ஆப்பம் முதலானவற்றுக்கும் சாதத்தில்
பிசைந்து சாப்பிடவும் ஏற்றது.
Comments
Post a Comment