என்னென்ன தேவை?
முருங்கைக்கீரை - 1 கட்டு
தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன்
தேங்காய் - 2 சில்லு
துவரம்பருப்பு - 1 டம்ளர்
விளக்கெண்ணெய், மஞ்சள்தூள் - தலா 1 டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
சின்ன வெங்காயம் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
எப்படிச் செய்வது?
முருங்கைக்கீரையை ஆய்ந்து வைக்கவும். தனியா, சீரகம், தேங்காய் இவற்றைச்
சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அரைக்கவும். துவரம் பருப்புடன் 1
டீஸ்பூன் விளக்கெண்ணெய், மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பருப்பு
வெந்ததும், கடையவும். பருப்பை அடுப்பில் வைத்து, அதில் சுத்தம் செய்து
வைத்திருக்கிற முருங்கைக்கீரையைச் சேர்த்து வேகவிடவும். அரைத்து
வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். சிறிதளவு
நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக
நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, கொதிக்கும்
கீரையில் சேர்த்து இறக்கவும்
Comments
Post a Comment