என்னென்ன தேவை?
இஞ்சி
- 25 கிராம், புளி - எலுமிச்சை அளவு, எண்ணெய் - சிறிது, கடுகு, சீரகம்,
உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் - தாளிக்கத் தேவையான
அளவு, வெல்லம் - ஒரு சிறு கட்டி, சாம்பார் பொடி - சிறிது, உப்பு -
தேவைக்கு.
எப்படிச் செய்வது?
இஞ்சியை
தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் சிதைக்கவும். புளியை ஊறவைத்து
கரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து இஞ்சி விழுதைச் சேர்க்கவும். 1/4
கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேக வைக்கவும். அதோடு புளிக்கரைசல்,
உப்பு, வெல்லம், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க
வைத்து இறக்கவும். தினமும் செய்யும் தேங்காய் சட்னியில் மிளகாயுடன் இஞ்சி,
கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் நல்ல மணத்துடன் இருக்கும். தேங்காயின்
கொழுப்பு உடலில் சேராது. ஜீரணமாகும்.
இஞ்சி ஸ்குவாஷ்
என்னென்ன தேவை?
இஞ்சி வேக வைத்த தண்ணீர் - அரை லிட்டர், சர்க்கரை - 1 கிலோ, சிட்ரிக் ஆசிட் - 10 கிராம், எலுமிச்சைப் பழம் - 5.
எப்படிச் செய்வது?
எல்லாவற்றையும்
ஒன்றாகக் கொதிக்க வைத்து ஆறியபின் எலுமிச்சைப் பழம் பிழிந்து கலந்து
பாட்டிலில் ஊற்றவும். தேவைப்படும்போது 1 பங்கு சிரப்புடன் 3 பங்கு தண்ணீர்
ஊற்றி கலந்து பரிமாறவும். இதை குடித்தால் 1/2 மணி நேரத்துக்குள் நன்றாக
பசி எடுக்கும்.
Comments
Post a Comment