என்னென்ன தேவை?
வெள்ளரிக்காய் - 200 கிராம்
வழுதலங்காய்
(பெங்களூர் கத்தரிக்காய்) - 200 கிராம்
சேனைக்கிழங்கு - 150 கிராம்
வாழைக்காய் - 1
கேரட் - 100
கொத்தரவங்காய் - 50 கிராம்
புடலங்காய் - 100 கிராம்
முருங்கைக் காய் - 1
பச்சை மிளகாய் - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் - 1
பூண்டு - 2
மிளகாய்த் தூள்,
மஞ்சள் தூள், உப்பு, சீரகம் - தேவையாள அளவு
சிறிய வெங்காயம் - 3
தயிர் - 100 மி.லி
தேங்காய் எண்ணெய் - 50 மி.லி
எப்படிச் செய்வது?
காய்கறிகள் அனைத்தையும் 2 அங்குல நீளத்துக்கு நறுக்கி வைத்துக் கொள்ள
வேண்டும். முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கி, இரண்டாகப் பிளந்து
கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், சிறிதளவு
மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் , சீரகம், பூண்டு சிறிய வெங்காயம்,
கறிவேப்பிலை இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை, நறுக்கிய
காய்கறிகள், தேவையான உப்பு ஆகியவற்றைப் போட்டு சிறு தீயில், ஆவியில்
வேகவைக்கவும். அடிப் பிடிக்காமல் இருக்க தேவைக்கேற்ப அவ்வப்போது தண்ணீர்
தெளித்துக்கொள்ளவும்.
காய்கள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைச் சேர்த்துக்
கிளறவும். அதில் தயிர், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி
எடுத்தால் சுவையான அவியல் தயார்.
Comments
Post a Comment