என்னென்ன தேவை?
புளித்த கெட்டியான மோர் - ஒரு தம்ளர் துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
புழுங்கல் அரிசி - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - சிறிதளவு
வெந்தயப் பொடி (வறுத்தது) - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
துவரம் பருப்புபையும் புழுங்கல் அரிசியையும் ஊறவையுங்கள். அவற்றுடன் மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதை மோரில் கலந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் காய்ந்த மிளகாய், வெந்தயப் பொடியைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து மோர் கலவையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கிவையுங்கள். பிறகு தேங்காய் எண்ணெயை மேலே ஊற்றிப் பரிமாறுங்கள்.
Comments
Post a Comment