என்னென்ன தேவை?
பச்சரிசி - 1 கப்,
வெல்லம் - 2 கப்,
பயத்தம் பருப்பு - 1/4 கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
முந்திரி - 10,
காய்ந்த திராட்சை - 15,
தேங்காய்ப் பல் - 1/4 கப்,
நெய் - தேவையான அளவு,
பச்சைக் கற்பூரம் - சிறிது,
பால் - 2 கப்,
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
ஜாதிக்காய் தூள் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
பயத்தம்
பருப்பை நெய்யில் லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். அரிசி, வறுத்த பாசிப்
பருப்புடன் கடலைப் பருப்பு, பால், தண்ணீருடன் குழைய பொங்கலாக வேக வைத்துக்
கொள்ளவும். கடாயில் வெல்லத்துடன் நீர் சேர்த்து, கொதிக்க விட்டு
வடிகட்டவும். பிறகு அதை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
இதனுடன் வெந்த பொங்கல் சேர்த்துக் கிளறவும். நெய் சேர்க்கவும். ஏலக்காய்
தூள், முந்திரி, ஜாதிக்காய் தூள், காய்ந்த திராட்சை, தேங்காய் பல்லை
நெய்யில் வறுத்து பொங்கலில் சேர்க்கவும். கடைசியாக பச்சைக் கற்பூரம்
சேர்த்து கிளறி இறக்கவும்.
Comments
Post a Comment