*குரங்குகளால் பேச முடியாவிட்டாலும், சத்தம் மற்றும் உடலசைவுகளைப் பயன்படுத்தி, தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
*இசபெல்
டினோயர் என்ற பெண்ணுக்கு 2005ம் ஆண்டு நவம்பரில் செய்யப்பட்டதுதான் உலகின்
முதல் முகமாற்று அறுவை சிகிச்சை. ஒரு நாய் கடித்ததால் முகமே அற்றுப் போன
அந்தப் பெண்ணுக்கு, புதிய திசுக்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதற்காக
சக்தி வாய்ந்த மருந்துகள் அளிக்கப்பட்டன.
*நமது பிரபஞ்சத்தின்
அண்டை வீட்டுக்காரரான ஆண்ட்ரோமேடா கேலக்சி, நமது பால்வழி மண்டலத்தைப் போல
இரு மடங்கு பெரியது. அதில் ஒரு ட்ரில்லியன் நட்சத்திரங்கள் இருக்கக்கூடும்.
*அற்புதமான
விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு,
யூரி காகரின் ஒரு பயிற்சி விமான விபத்தில் இறந்து போனார்.
*அமெரிக்காவிலுள்ள
ஹண்ட்ஸ்வில்லி ஸ்பேஸ் மியூசியத்தில், பார்வையாளர்களும் ஒரிஜினல்
உபகரணங்களைப் பயன்படுத்தி விண்வெளிப் பயிற்சி மேற்கொள்ளலாம்.
*விண்வெளிக்கு லிஃப்ட் மூலம் செல்லும் கனவுத் திட்டத்துக்காக, ஓர் அமெரிக்க நிறுவனம் உழைத்துக் கொண்டிருக்கிறது.
*பெண்களை விட ஆண்கள் சற்று உயரமாக இருப்பது பரிணாம வளர்ச்சிப்படியே ஏற்பட்டிருக்கிறது.
*ஒத்த உரு கொண்ட இரட்டையர்களுக்கு ஒன்று போலவே ஜீனோம் அமைந்திருந்தாலும், அவர்கள் 100 சதவீதம் அச்சு அசலாக இல்லாமலும் இருக்கலாம்.
*சுவையை மிகத்துல்லியமாக அறிவதில் நாக்கை விட மூக்கின் பங்கே அதிகம்.
*நமது ரத்தச் சிவப்பு அணுக்கள் தினமும் ஏறத்தாழ 15 கிலோமீட்டர் தூரம் பயணமாகின்றன.
Comments
Post a Comment