*பறந்து கொண்டிருக்கும் ஒரு சோப்புக்குமிழி வெடிக்கும் தருணம் ஆயிரத்தில் ஒரு நொடிக்குள் அமைந்து விடுகிறது.
*மேக மூட்டமுள்ள ஒரு நாளில் சூரியனின் 70 சதவீத கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.
*அமெரிக்காவில்
2012ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் 30 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.
1930க்குப் பிறகு, இதுதான் அங்கு மிகப்பெரிய வறட்சியாம். இந்தியாவில்
ஏற்படும் பஞ்சங்களும் வறட்சிகளும் இதைவிடப் பல மடங்கு தீவிரமானவை!
*உலகின்
முதல் நீராவி எஞ்சின் 1804ல் இயங்கியபோது, அதன் சராசரி வேகம் மணிக்கு 3.9
கிலோமீட்டர். இப்போதைய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக
ரயில்களின் வேகத்தோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள்!
*உலகில் 2030ம் ஆண்டில், நீர்ச் சேவைகளைப் பராமரிக்க 537 பில்லியன் டாலர் தேவைப்படும்... அப்போது நீர்வளம் இருந்தால்!
*கேவியர்
வகை மீன்களும் அதன் முட்டைகளும் ரகசிய அறைகளில் ரகசியமான முறையில்
பாதுகாக்கப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. காரணம், அதன் நம்பமுடியாத விலை!
ஒரு காலத்தில் இவை இலவசமாகவே வழங்கப்பட்டன என்பது இன்னொரு ஆச்சரியம்!
*நறுமணப் பொருட்களைத் தேடிச் சென்றபோதுதான், ஐரோப்பியர்கள் தூரக் கிழக்கு நாடுகளைக் கைப்பற்றினர்.
‘*எந்திரன்’
டைப் ரோபோக்கள் அணிகிற ரோபோடிக் சூட்டுக்கு ஆற்றல் தர 41 அல்கலைன்
பேட்டரிகள் தேவை. 2 ஆண்டுகள் வரை செயல்படும் இந்த பேட்டரிகளுக்கான செலவு
ரூ.90 ஆயிரம்!
*முக்கால் லிட்டர் ஷாம்பெய்ன் பாட்டிலில் உள்ள
நீர்க்குமிழிகளின் எண்ணிக்கை சுமார் 10 கோடி. ஆமாம்... அதைக் குடிக்காமல்
இந்தக் கணக்கீட்டைச் செய்திருக்கிறார் ஒரு ‘நிபுணர்’!
Comments
Post a Comment