*4
லிட்டருக்கும் குறைவான எரிபொருளில் 350 கிலோமீட்டர் பயணிக்கக்கூடிய
Urbee 2 என்ற கார் ஆராய்ச்சிக்கட்டத்தில் உள்ளது. இது 3டி பிரின்டிங்
தொழில்நுட்பத்தில் உருவானது!
*நாம் அறிந்த வரையில், மிகத்
தொலைவிலுள்ள கேலக்சியிலிருந்து வெளிப்படும் ஒளி நம்மை அடைய 13.1 பில்லியன்
ஆண்டுகள் பிடிக்கும். பெருவெடிப்பு நிகழ்ந்து, 700 மில்லியன் ஆண்டுகள் ஆன
பிறகே, இந்த ஒளி உமிழல் தொடங்கியது!
*தென் ஆப்ரிக்காவில் பிறந்து,
கனடா-அமெரிக்காவின் பிசினஸ் மேக்னட்டாகத் திகழும் எலோன் மஸ்க் உலகின்
அதிவேக போக்குவரத்துத் திட்டத்துக்கான ஐடியா வைத்திருக்கிறார். அதன் பெயர்
ஹைபர்லூப். கேப்ஸ்யூல் போன்ற ட்யூப்களில் அமர வைக்கப்படும் பயணிகள் மணிக்கு
1,223 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தப்படுவார்கள். இத்திட்டம் நடைமுறைக்கு
வருமானால், சென்னையிலிருந்து மதுரையை அரை மணி நேரத்துக்குள் அடைந்து
விடலாம்!
*29.6 காரட் எடை கொண்ட மிக அரிதான நீல வைரம், சமீபத்தில்
தென் ஆப்ரிக்காவின் குல்லினன் சுரங்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு காரட்
என்பது 0.2 கிராம்.
*2013ல், லண்டன் கழிவுநீர் குழாய் அமைப்பில்
மிகப்பெரிய அடைப்பு ஏற்பட்டது. அது என்னவென ஆராய்ந்ததில் கிடைத்தது, 15 டன்
எடையுள்ள மிகப்பெரிய கொழுப்புப்பாறை! உறைந்த கொழுப்பும் இன்னபிற
கழிவுகளும் சேர்ந்து, ஒரு பஸ் அளவுக்கு தடையாக உருவாகியிருந்தது.
*மின்னல்
வெட்டும்போது அதைச் சூழ்ந்திருக்கும் பகுதியே உலகின் மிக வெப்பமான இடம்.
நொடிக்கும் குறைவான ஒரு பொழுதில், அங்கு 30 ஆயிரம் டிகிரி செல்சியஸ்
வெப்பநிலை இருக்கும்.
*உலகில் மிகமிக நெருக்கமாக மக்கள் வாழும் இடம்
பங்களாதேஷ் தலைநகரமான டாக்கா. இங்கு ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 44,500
பேர் வசிக்கின்றனர்.
*உலகின் 48 ஏழை நாடுகளின் மொத்த சொத்து மதிப்பை விட, உலகின் 3 பணக்காரக் குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகம்!
*ஹெச்டி
தரத்திலுள்ள 44 சினிமாக்களை, அப்படியே ஒரு நொடியில் டவுன்லோடு செய்யும்
பிராட்பேண்ட் வசதி லண்டனில் உள்ளது. இதன் வேகம் நொடிக்கு 1.4 டெராபைட்ஸ்.
Comments
Post a Comment