*ஒரு
மியூசியத்தில் ‘கோலியாத் பீட்டில்’ என்ற வண்டுக்கு வாழைப்பழம்
அளிக்கப்பட்டது. தன்னுடைய கொம்புகளாலேயே தோலை உரித்துவிட்டு, பழத்தைத்
தின்று முடித்தது அவ்வண்டு!
*காண்டர் என்ற சிறப்புப் பறவையானது, ஒருமுறை தென் அமெரிக்காவில் 20 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தோடு மோதியிருக்கிறது!
*பாராசூட் வீரர்கள் பூமியில் குதிக்கும் அதிகபட்ச உயரம் 30.5 கிலோமீட்டர்!
*தகர (டின்) டப்பாக்கள் முழுக்க முழுக்க தகரத்தினால் மட்டுமே செய்யப்பட்டவை அல்ல!
*ஒரு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அதன் வயிற்றில் 267 கூழாங்கற்கள் காணப்பட்டன!
*உலகில் ஒவ்வொரு நாளும் விமானப் பயணங்களின்போது 70 ஆயிரம் பேக்கேஜ்கள் தொலைகின்றன.
*30 அடி நீளமுள்ள சுறாவின் வயிற்றில், ஒருமுறை 50 கிலோ எடையுடைய கடல் சிங்கம் காணப்பட்டது!
*ஃபிளாட்ஃபிஷ் என்ற மீன்வகை சுற்றுப்புறத்துக்கேற்ப தன் உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்!
*நல்ல பார்வைத்திறன் உடையவர்களால் ஒரு மைல் தூரத்தில் (1.6 கி.மீ.) உள்ளவரையும் முக அடையாளம் காண முடியும்!
*1948ல்தான் கடைசி வைட்டமின் கண்டறியப்பட்டது. அது பி12!
Comments
Post a Comment