*கடல் முள்ளெலிகள் (sea hedgehogs) ஒரு அடி நீளத்துக்கும்
குறைவான அளவே இருந்தாலும், 20 அடி நீளமுள்ள சுறாவையும் கொல்லும் திறன்
மிக்கவை.
*மத்திய காலகட்டத்தின் பிற்பகுதியில் கண் கண்ணாடிகள்
ஆபரணமாகவே கருதப்பட்டன. கூடையில் சுமந்து தெருக்களில் விற்பனை செய்வதும்
நடந்தது.
*1960ல் ஏற்பட்ட ஒரே ஒரு நிலநடுக்கத்தால் வெகுதொலைவில் உள்ள இரு நாடுகளில் கூட (ஜப்பான், சிலி), சுனாமி உருவானது.
*Tahltan
Bear Dog... இதுதான் உலகில் மிகமிகக் குறைவான எண்ணிக்கையில் காணப்பட்ட
நாய் இனம். சில ஆண்டுகளுக்கு முன் மூன்றே மூன்று என நாய்த்தொகை கொண்ட
இவ்வினம் இப்போது இருப்பது ஐயமே!
*பனிப்பாறைகள் இதுவரை அதிகபட்சமாக
நீர்மட்டத்திலிருந்து 550 அடி உயரம் வரை உருவாகியுள்ளது. கடல்
அடிமட்டத்திலிருந்து கணக்கிட்டாலோ, 4,950 அடி உயரம்!
*எந்த ஒரு ஆண்டிலும், மூன்றுக்கு அதிக சந்திர கிரகணங்கள் நிகழ்வதில்லை. சில ஆண்டுகளில் நிகழ்வதே இல்லை!
*ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு இன்ச் மழை பொழிந்ததை எடை போட முடிந்தால், 113 டன் தண்ணீர் கிடைத் திருக்கும்!
*கடலலைகள் பொதுவாக 50 அடி உயரம் வரை எழுவதுண்டு. அதிகபட்சமாக ஒருமுறை 112 அடி எழுந்ததையும் மனிதர்கள் கண்டிருக்கிறார்கள்!
*நட்சத்திரங்களின்
பிரகாசத்தை மேக்னிடியூட் (ஒளிர்வு பரிமாணம்) என்ற அளவு கொண்டே விஞ்ஞானிகள்
கணக்கிடுகிறார்கள். 6க்கு அதிக மேக்னிடியூட் கொண்ட நட்சத்திரங்களை
டெலஸ்கோப் மூலமே பார்க்க முடியும்
*நுரையீரலால் சுவாசிக்கும் உயிரினங்களிலேயே மூத்தவை தவளை போன்ற நீர்நில வாழ்விகளே. அவை 40 கோடி ஆண்டுகள் முன்பே தோன்றியவை.
Comments
Post a Comment