*1964ல்
நார்வேயின் ஆஸ்லோ நகரத்தில், 20 ஆயிரம் கருவிகளைப் பயன்படுத்தி, உலகின்
மிகப் பிரமாண்டமான ஆர்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
*சில
நூற்றாண்டுகளுக்கு முன் வரை, சீனப்பெண்கள் கத்தரிச் செடியிலிருந்து
தயாரிக்கப்பட்ட வண்ணப்பூச்சைப் பயன்படுத்தி, பற்களை கறுப்பாக்கிக்
கொண்டனர்!
*பிஷப் நாற்காலிக்கு லத்தீன் மொழியில் ‘கதீட்ரா’ என்று
பெயர். அதனால்தான் இன்றும் பல தேவாலயங்கள் ‘கதீட்ரல்’ என்று
அழைக்கப்படுகின்றன.
*1664ல் ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட 10 டாலர் நாணயங்கள் ஒவ்வொன்றும் 19.5 கிலோ எடை இருந்தது!
*மற்ற எந்த உணவையும் விட அமெரிக்கர்கள் அதிக அளவு எடுத்துக்கொள்வது பால்தான். சராசரியாக ஆண்டுக்கு 132 கிலோ/ஒருவருக்கு!
*இதுவரை ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட தொப்பி நெப்போலியன் அணிந்ததுதான். 1970ல் 17 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்!
*ஆங்கில எழுத்துகளிலேயே மிகப்பழமையானது ‘ o’. 3 ஆயிரம் ஆண்டுகளாகவே இந்த எழுத்து எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. ஓ போடு!
*70
ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் இப்போது இருப்பதை விடவும் மிக அதிக
செய்தித்தாள்கள் (2,461) வெளிவந்தன. இப்போது 1,700க்கும் குறைவுதான்!
*உலகில் மிக அதிகமாகப் புழக்கத்தில் உள்ள பெயர் ‘மொஹமத்’.
*இதுவரை எடுக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய ஆம்பர் ஜெம் ஸ்டோனின் எடை 15 கிலோ!
Comments
Post a Comment