Skip to main content

Posts

Showing posts from June, 2014

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

நம்பினால் நம்புங்கள் 15

* சீனாவிலுள்ள  Qingdao  - Haiwan   சாலைப் பாலத்தின் நீளம் 42.4 கிலோமீட்டர். 2007ல் தொடங்கி, 2011ல் கட்டி முடிக்கப்பட்டது இப்பாலம். * போலி மதுபானங்களைக் கண்டறியவும் லேசர் தொழில்நுட்பம் உதவும். * 2050ம் ஆண்டுக்குள், நம் மூளையிலுள்ள அத்தனை தகவல்களையும் ஒரு கணிப்பொறிக்குள் ‘பேக் அப்’ செய்துவிட முடியும் என எதிர்காலவியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். * 14ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட பூபோனிக் பிளேக் நோய் தாக்குதலில் 2.5 கோடி மக்கள் பலியானார்கள். * 2009ல் வட கொரியாவில் நிலத்தடி அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. * பாதிக்கப்படும் பரப்பளவு அடிப்படையில், நெதர்லாந்திலேயே மிக அதிக சூறாவளிகள் ஏற்படுகின்றன. அங்கு ஒவ்வொரு 1,991 சதுர கிலோமீட்டருக்கு ஒரு சூறாவளி. சூறைப்புயல்களுக்குப் புகழ்பெற்ற அமெரிக்காவிலோ, இது 8,187 ச.கி.மீ-க்கு ஒன்றாக இருக்கிறது. நம் காதிலுள்ள மெழுகும், தாடையின் அசைவும் இணைந்து தூசுகள், இறந்த செல்கள் போன்றவற்றை வெளித்தள்ளி விடுகின்றன. * பூமராங் நெபுலா - பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம் இதுதான். பூமியி...

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்

உடல் எடை குறைய பல்வேறு விதமான பயிற்ச்சிகளை மக்கள் செய்து வரும் சூழலில், பயிற்சியுடன் கீழே குறிப்பிட்டுள்ள சரியான உணவுகளை அளவோடு உணவில் சேர்த்து வந்தால் விரைவாக எடை குறையலாம். மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள். கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும். ஆப்பிள்களில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம். நட்ஸில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளாதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்...

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

வாகன ஓட்டுநர் உரிமம் பெற என்னென்ன சான்றுகள் தேவை? இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டை, எல்.ஐ.சி. பாலிசி சான்று, வயதுச் சான்றாக பள்ளி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) போன்ற அரசு வழங்கிய சான்றுகள், பாஸ்போர்ட் அளவில் 3 புகைப்படங்களுடன் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெறுவதற்கு ‘படிவம் 2’-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 50 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மருத்துவச் சான்றிதழுடன் ‘படிவம் 1’-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும், இரு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 30-ம், அதனுடன் சேர்த்து நான்கு சக்கர வாகன பழகுநர் உரிமம் பெற ரூ. 60-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். # பழகுநர் உரிமம் பெற்று எத்தனை மாதங்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெறலாம்? பழகுநர் உரிமம் 6 மாதம் வரை செல்லுபடியாகும். பழகுநர் உரிமம் பெற்று, ஒரு மாதத்துக்கு பின்னரே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். ஒரு மாத கால இடைவெளி, வாகனங்களை நன்றாக ஓட்டிப் பழகுவதற்காக வழங்கப்படுகிறது. பழகுநர் உரிமம் பெறும்போது, வாகனத்தை ஓட்டிக் காட்டுவதோடு சாலை விதிகள் குறித்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்க வேண்டும். # மாற்றுத் திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெறமுடிய...

நம்பினால் நம்புங்கள் 14

* ‘ஈபே’ இணைய தளத்தில் விண்கல் கூட விற்கிறார்கள்! * எரிமலை வெடித்துச் சிதறும்போது, மின்னல் கீற்றுகள் போன்ற ஒளி வெப்பமும் உள்ளிருந்து வெளிப்படும். * பெரும்பாலான ஆப்ரிக்க யானைகளின் காதுகள், அக்கண்டத்தின் வரைபடம் போலவே அமைந்துள்ளன! * சிவப்பு க்ரேயானில் மட்டுமே 29 ஷேடுகள் உள்ளன. * சில வகை மீன்கள் தரையில் நடக்கவும் செய்யும்! * ஜப்பானில் ஸ்கூபா டைவர்களுக்காகவே கடலுக்கு அடியில் 33 அடி ஆழத்தில் ஒரு போஸ்ட் பாக்ஸ் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கடலடியில் இருந்தே போஸ்ட் கார்டு அனுப்ப முடியும்! * டால்பின்களால் நீருக்கு அடியில் 24 கிலோமீட்டர் தொலைவிருந்து கூட ஒலியைக் கேட்க முடியும். * காட்டெருமையையும் பசுவையும் கலப்பினமாக்கி   ஙிமீமீயீணீறீஷீ   என்ற புதுவகை விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பாதி எருதும் பாதி பசுவும் கலந்த புதுமை! * முன்னொரு காலத்தில் வௌவால் எச்சத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்கான மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. * முள்ளம்பன்றிகளால் நீரில் மிதக்கவும் முடியும்.

35 Best Affiliate Program in India

Did you know affiliate marketing is widening  its scope in India with some great demand by several western companies. And there is a reason to it. First, India is one of largest marketing hub in the world and has a outstanding potential for innovative business. Second, cheap payouts with less investment plans. And third free advertisement to large audience.  Many of these affiliate agencies aim best Indian bloggers and webmaster to showcase their product and services. Gradually, Indian companies are learning through foreign affiliate modus operandi. They are now building various marketing programs to reach to large and target audience. Today affiliate program is one of the best source to generate profits online. Many bloggers in India consider affiliate program as a finest alternate for Google Adsense also (as adsense is very hard to get your hand on). There are very few Indian based affiliate companies that are successful to make their mark and liked by a majority of India...

திருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்

சூப்பர் டிப்ஸ் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் தான் பார்த்துப்பார்த்து செய்வார்கள். குறிப்பாக ஜாதகப்பொருத்தத்தை  கவனமாக பார்ப்பார்கள். அந்த வகையில் திருமண பொருத்தத்தை நீங்களே (வாசகர்கள்) அறிந்து கொள்ள இதோ டிப்ஸ்... 1. தினப் பொருத்தம்: மணப்பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று  வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு. இதுதவிர பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண்  தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப்பொருத்தம்தான். இருவருக்கும் ஒரே நட்சத்திரம் இருந்தாலே தினப்பொருத்தம்தான்.  ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் இது பொருந்தாது.  மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தம்தான். 2. கணப் பொருத்தம...

சரவணா ஸ்டோர்ஸ்

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். ‘‘எந்த ஊர் நீங்க?’’ ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல..’’ ‘‘இப்போ அப்படி இல்ல... அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’ ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’ ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’ ‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷிப்ட். இங்கே ஷிப்ட் கணக்கு எல்லாம் உண்டா?’’ ‘‘ஷிப்டா... அதெல்லாம் தெரியாதுண்ணேன். காலையில வரணும். நைட் போகனும். அவ்வளவுதான்..’’ ‘‘சாப்பாடு?’’ ‘‘கேண்டீன் இருக்கு. கொஞ்ச, கொஞ்ச பேரா போய் சாப்பிட்டு வருவோம்.’’ ‘‘எத்தனை மணிக்கு தினமும் தூங்குவீங்க?’’ ‘‘12 மணி, 1 மணி ஆகும். காலையில எழுந்ததும் வந்திருவோம்’’ ‘‘தங்குற இடம், சாப்பாடு எல்லாம் நல்லா...

நம்பினால் நம்புங்கள் 13

* உலகில் 50 சதவிகித பெண்கள் அனுப்டபோபியா என்ற பிரச்னைக்கு ஆளாகின்றனர். ‘திருமணம் ஆகாதோ’, அல்லது ‘தவறான நபரைத் திருமணம் செய்து கொள்வோமோ’ என்ற பயத்தையே இந்த போபியா குறிக்கிறது. * 100 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, இப்போது அமெரிக்காவில் அதிக மரங்கள் இருக்கின்றன. * திருமணம் ஆகாதவர்களில் 58 சதவீதம் பேர் ‘வாலண்டைன்’ஸ் டே’வை விரும்புவதில்லை! * சமீபத்தில் வாழைப்பழம் சாப்பிட்டவர்களை கொசுக்கள் நெருங்கி வரும். * வாழ்வின் துயரமான நினைவுகளை மறையச் செய்யும் லேசான மின் அதிர்ச்சி சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். * கேன்சர் செல்களை ஓரளவு அழிக்கும் திறன் எலுமிச்சைக்கு உண்டு என சமீபத்திய ஆராய்ச்சியில் அறியப்பட்டிருக்கிறது. * நமது தொப்புளில் மட்டுமே 2 ஆயிரத்துக்கும் அதிக பாக்டீரியா வகைகள் உள்ளன. * வீடியோ கேம்ஸ் ஆடுவது மனச்சோர்விலிருந்து விடுபட ஓரளவு உதவும். * பாலூட்டிகளிலேயே மிக மெதுவாக வளர்ச்சி பெறுவது மனிதனே! * கேரட்டின் நிறம் ஒரு காலத்தில் ஊதாவாக இருந்தது. * பேஸ்கட் பால் ஆட்டம் தோன்றியபோது, பந்தின் நிறம் பிரவுன் ஆக இருந்தது. பிற்காலத்தில் ஆரஞ்சுக்கு மாற்றப்பட்டது. * காலபோகஸ் தீவில் இ...

உங்கள் மனைவி கர்ப்பமா? அப்போ இதை சொல்லாதீங்க

பெண்கள் கர்ப்பமாக ஆகிவிட்டாலே பல வித பிரச்சனைகளும் தொடர ஆரமித்துவிடும்.உடல் முழுக்க பிரச்சனை தரும் ஹார்மோன்கள் சுரந்துக் கொண்டே இருக்கும். அப்படிபட்ட கர்ப்ப காலத்தில் பெண்களை பார்த்துக் கொள்ளும் ஆண்களுக்கு பதக்கம் தான் கொடுக்க வேண்டும். சாதாரண நேரத்தை விட கர்ப்ப காலத்தில் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆண் தான் பிரச்சனையை சந்திக்க வேண்டும். எப்படி இருப்பினும் ஆண்கள் சில விடயங்களை கர்ப்பமாக இருக்கும் பெண்களிடம் சொல்லக்கூடாது. அவற்றைப் பற்றி பார்ப்போம். மீண்டும் சாப்பிடு கர்ப்ப காலத்தில் எப்போதும் நல்ல உணவு வகைகளை உண்ண வேண்டும். உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கையில், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவருக்கு பல உணவுகளை எடுத்துக் கொடுத்து உண்ண வற்புறுத்துவார்கள். அதனை உண்ண வேண்டுமானால் ஒரு நாள் போதாது. வீடு ஏன் குப்பையாக உள்ளது? கர்ப்பிணியான மனைவியிடம் சொல்ல கூடாத விஷயத்தில் இதுவும் ஒன்று. வீடு சுத்தமாக இல்லையென்றால் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நீங்களே சுத்தப்படுத்துங்கள். வேகமாக நட கர...

Tamil joke

சில உளவியல் ஆலோசனைகள்

தெரிந்துகொள்வோம்  சில உளவியல் ஆலோசனைகள்...! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். 6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும். 7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும். 8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும். 9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். 10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்." class="scaledImageFitWidth img...

மின்சார கட்டணத்தை எப்படி செலுத்தலாம்

# என்னென்ன கட்டண வகைகள் உள்ளன? புதிய மின் இணைப்பு பெற பதிவு கட்டணம், இணைப்புக் கட்டணம், மீட்டர் பாதுகாப்பு காப்புத்தொகை, விரிவாக்கக் கட்டணம் மற்றும் காப்புத் தொகை வசூலிக்கப்படுகின்றன. இது தவிர மீட்டர் மாற்று கட்டணம், மீட்டர் பலகை மாற்று கட்டணம், துண்டிப்பு மற்றும் மறு இணைப்புக் கட்டணம், மீட்டர் மாற்ற, மீட்டர் பரிசோதனை ஆகிய கட்டணங்களும், மின் சுமை குறைப்பு மற்றும் அதிகரிப்புக் கட்டணங்கள், மின் பயன்பாட்டுக் கட்டணம், பெயர் மாற்றம், அபராதக் கட்டணம் போன்ற வகைகள் உள்ளன. # கட்டணத்தை எப்படி செலுத்தலாம்? மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகங்களில் பணம், காசோலை அல்லது வரைவோலையாக செலுத்தலாம். தேர்வு செய்யப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தபால் அலுவலகங்கள், சிட்டி வங்கி, கரூர் வைஸ்யா வங்கியின் மொபைல் போன் வங்கி சேவை ஆகியவை வழியாகவும், இணையதளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகவும், தானியங்கி மின் கட்டண இயந்திரம் மூலமாகவும் செலுத்தலாம். குறிப்பிட்ட சில செல்போன் சேவைகள் வழியே, மொபைல் போனிலும் செலுத்தலாம். # எத்தனை நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்? தாழ்வழுத்த மின் ...

நம்பினால் நம்புங்கள் 12

  * அமெரிக்காவிலுள்ள ஜாக்கெரி ரெய்டெல் என்பவரின் மின் அஞ்சல் முகவரியில் மொத்தம் 411 எழுத்துகள். இதுவே மிக நீளமான இமெயில் முகவரி! * 7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கம் மட்டுமல்ல... அதிகமான தூக்கமும் இதயப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். * இப்போதைய நிலை தொடர்ந்தால், இன்னும் 30 ஆண்டுகளுக்குள் உலகின் ஹீலியம் இருப்பு காணாமல் போய்விடும். * ஆன்லைனில் நேரம் செலவழிப்பது கடந்த 6 ஆண்டுகளில் சராசரி நபருக்கு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2007ல் இந்த போதை ஒரு மாதத்துக்கு 13 மணி 30 நிமிடங்களாகத்தான் இருந்தது. கணிப்பொறித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இது பொருந்தாது. * இங்கிலாந்தில் சராசரியாக ஒருவர் ஓராண்டு சாப்பிடும் சாக்லெட்டின் அளவு 9 கிலோ! * கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். * உலக சூதாட்ட மார்க்கெட்டின் இன்றைய மதிப்பு 1776600 கோடி ரூபாய்! * ‘ஆயிரத்தில் ஒன்று’ என்பது ‘பத்தில் ஒன்று’ என்பதை விட மிகப்பெரி யது என 25 சதவீதம் மக்கள் தவறாக நினைக்கின்றனர்! * ஓராண்டில் நாம் 62 லட்சத்துக்கும...

கேன்சரை தடுக்கும் மஞ்சள் வண்ண பழங்கள், காய்கறிகள்

கேரட், பூசணி, அன்னாசி, ஆரஞ்சு, பலாப்பழம், மாம்பழம் போன்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. இவை இதயம் மற்றும் கண்களை பாதுகாக்கின்றன. கேன்சர் அபாயத்தை குறைக்கின்றன. இவற்றில் உள்ள பீட்டா கரோட்டினை நமது உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. ஆரஞ்சு வண்ண பழங்களில் ஆல்பா கரோட்டின் அதிகம் உள்ளது. இதுவும் மற்றொரு வகையான வைட்டமின் ஏ ஆகும். இவை கேன்சர் செல் வளர்ச்சியை தடுக்கின்றன. கரோட்டினாய்டு இதய நோய்களை தடுக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் ஆரஞ்சு வண்ண காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டால் மாரடைப்பு ஆபத்து குறைவதாக கூறப்படுகிறது. இவை கண்களையும் பாதுகாக்கின்றன. கண் நோய்கள், பார்வை குறைபாடுகளை நீக்கும் வலிமை இந்த பழங்களுக்கு உண்டு. பெரியவர்கள் ஒரு வாரத்திற்கு 4 முதல் 6 கப் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் 3 கப் சேர்த்துக் கொள்ளலாம்.

இளவயதில் முடி நரைக்கிறதா? இது தான் காரணம்

இன்றைய இளைய தலைமுறைகளை பாதிக்கும் பெரிய பிரச்சனை அவர்களுக்கு முதுமை தோற்றத்தை தரும் இளநரை தான்.நமது வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற தன்மை, வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆகிய காரணங்களால் அவர்களின் தலைமுடி பாதிப்புக்கு உள்ளாகிறது. காரணங்கள் மன கவலைகள்: மன அழுத்தம் ஏற்பட்டால், தலை சருமம் கடுமையான டென்ஷனுக்கு உள்ளாகும். அது நல்ல முடி வளர்ச்சிக்கு அளித்து வரும் ஊட்டச்சத்திற்கு தடையாக நிற்கும். இதுபோக மன அழுத்தம், இரத்த சோகை, ஆரோக்கியமற்ற தலை சருமம், தலை முடியை சரிவர பராமரிக்காமல் இருப்பது மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் இளநரை உண்டாகிறது. எலெக்ட்ரிக் ட்ரையர்: எலெக்ட்ரிக் ட்ரையர் மற்றும் கடுமையான முடி சாயம் பயன்படுத்துவது, மரபியல் சார்ந்த கோளாறு, ஹீமோதெரபி, கதிர்வீச்சு என பல காரணங்களால் இந்த பிரச்சனை உண்டாகிறது. சில நேரங்களில் 8 வயதான சிறுவர்களுக்கு கூட, லேசாக முடி நரைப்பதுண்டு. பின் அவர்கள் வளர வளர நரை முடியும் அதிகரிக்கும். உணவில் சத்துக்கள் குறைபாடு: முதல் காரணம் தவறான உணவு பழக்கங்கள். உணவில் சில வைட்டமின் பி, இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் அயோடின் போன்றவற்றில் குறைபாடுகள் இருந்...

இமயமலை ரகசியம் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்

  மண்ணில் கிடைக்கும் தாதுப் பொருள்களையும் பூமிக்கடியில் புதையுண்ட உயிர்களின் படிமங்களையும் ஏராளமாகச் சேகரித்து ஆராய்ந்து வெளியிட்டவர்  டி.என்.வாடியா. இமயமலை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சி, வாடியாவை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அவரது உழைப்பு பூமிக்குக் கீழே  இருப்பவைகளைக் காணும் கண்ணாக விளங்கியது. வாடியா, 1883ம் ஆண்டு, அக்டோபர் 25ம் தேதி குஜராத்தின் சூரத் நகரில் பிறந்தார். பள்ளியில் அனைத்துப்  பாடங்களிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். வாடியாவுக்கு படிக்கும் காலத்திலேயே ஓவியம் வரைவதில் தீவிர ஆர்வம் இருந்தது. ஆனால் இது அவரது சகோதரருக்கு பிடிக்கவில்லை. வாடியா ஒரு  விஞ்ஞானியாக வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். வாடியாவும் சகோதரரின் ஆசையை நிறைவேற்ற, விஞ்ஞானத்தின் மீது கவனத்தைத் திருப்பினார்.  பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, பரோடா கல்லூரியில் உயிரியல் பாடப் பிரிவில் சேர்ந்தார். அடுத்து பி.எஸ்ஸி முடித்து எம்.எஸ்ஸியிலும் பட்டம் பெற்றார். தனது 23வது வயதில் வாடியா ஜம்மு நகரிலுள்ள 'பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்' கல்லூரியில் பேராசிரியராக வேலையில் சேர்ந்தார். இமயமலையி...

பிரசவ கால வலிகள்

பிரசவ தேதி நெருங்கும் போது, எப்போது வலி வரும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்பவர்களுக்கு, அதற்கு முன் வருகிற வலிகள் பீதியைக் கிளப்புபவை. கர்ப்பம் உறுதியானதில் தொடங்கி, பிரசவத்துக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும் வரக் கூடிய இந்த வலிகளைப் பற்றியும், அவற்றுக்கான காரணங்கள் பற்றியும் விளக்கமாகச் சொல்கிறார் மருத்துவர் நிவேதிதா. ‘‘முதல் ட்ரைமெஸ்டர் எனப்படுகிற கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கர்ப்பமான 6 - 7வது வாரங்களில் வயிறு மற்றும் இடுப்பு வலி வரும். கர்ப்பப் பை விரிந்து கொடுப்பதால் வருகிற வலியாக இருக்கலாம். சில நேரங்களில் வெள்ளைப் படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றுடன் வலியும் இருந்தால், அது சிறுநீர் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.  கர்ப்பப்பையும், சிறுநீர்பையும் அருகருகே இருப்பதால், ஒன்றை ஒன்று அழுத்துவதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது சகஜம்தான். ஆனால், மேலே சொன்ன அறிகுறிகளுடன் வலி இருந்தால், அது சிறுநீர் தொற்றா எனப் பார்த்து, சிகிச்சைகள் எடுக்க வேண்டியது அவசியம். அதிக தண்ணீர் குடிப்பது, தேவைப்பட்டால் கல்ச்சர் டெஸ்ட் செய்து பார்த...

குறட்டை: நோயா, நோயின் அறிகுறியா?

அரட்டைக் கச்சேரி நடக்கிற அறையில்கூடத் தூங்கிவிடலாம், ஒரு குறட்டை ஆசாமியுடன் தூங்குவது இயலாத காரியம் – எல்லாமே, நாமும் தூங்க ஆரம்பித்துக் குறட்டை விடும்வரைதான். பெரும்பாலான கல்யாண வீடுகளில் இந்தக் காட்சியைப் பார்க்கலாம். இரவு 11 அல்லது 12 மணிக்கு ஃபேன் இருக்கும் இடமாகப் படுத்துக்கொள்ளலாம் என்று தேடியலைந்து படுக்கும்போது, பக்கத்திலேயே ஒருவரோ, இருவரோ தூங்குவது மட்டுமில்லாமல், நமக்கு அதிருஷ்டமில்லாமல் போனால் குறட்டையையும் விட்டுக்கொண்டே தூங்குவார்கள். ஒருவரது குறட்டை குளவியின் ஓசையைப் போல என்றால், இருவர் சேர்ந்துவிட்டால் இரட்டை நாயனம். அதற்கும் மேல் என்பது மழைக்காலத்துக் குட்டையில் கூடியிருக்கும் தவளைகளின் கோஷ்டி கானம் போல ஆகிவிடும். ஆயுள் தண்டனையை விடக் கொடியது குறட்டையாளர்களின் கூட்டு. ஏன் ஏற்படுகிறது? தேவைக்கு மேல் உடல் எடை அதிகரிக்கும்போதும், வயது ஏற ஏறவும் குறட்டை ஏற்படுகிறது. ஒருவித ஒவ்வாமையாலும் சைனஸ் பிரச்சினையாலும், மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச் சுவர் வளைவதாலும், தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதாலும், குடிப்பழக்கத்தாலும், தூக்க மாத்திரைகள் சாப்பிடுவ...

ஆரோக்கிய டிப்ஸ்

கருப்பு திராட்சை சத்துக்கள்: கருப்பு திராட்சைகள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினமும் கறுப்பு திராட்சை சாப்பிட்டால் தலைமுடி நரைக்காமல் இருக்கும். இதயத்தை பலப்படுத்த உதவும். இதயத்தை சீராக்கும் மீன்: மீனில் இருக்கும் ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு இருப்பதால், அவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுகிறது. இதனால் இதய துடிப்பை சீராக வைக்க மீன் உதவுகிறது. ஆயுள் அதிகாரிக்கும் தயிர் : தயிரில் உள்ள லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் கிருமிகள் வராமல் தடுக்கிறது. தயிரிலுள்ள கால்சியம் உடலில் உள்ள எலும்புகளை தேயாமல் காப்பாற்ற உதவும். எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிகப்படியான செல்களை உருவாக்க தயிர் உதவுகிறது. உடல் எடையை குறைக்க தயிர் உதவுகிறது. புதினாக்கீரை : சிறுநீரகம் சமந்தமான பிரச்னை குறைக்க உதவும். மணத்தக்காளிக்கீரை : நாவில் உள்ள புண்களை நீக்கும். மனித உடலின் மனித உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் தன்மை மணத்தக்காளிக்கீரை அதிகமாக உள்ளது. முளைக்கீரை: ரத்த அழுத்த சமந்தான பிரச்னைகளை குறைக...

மீன்கள் சில உண்மைகள்

  * மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன. * முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம். * மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். * ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. * மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் வடிவத்திலும் பருமனிலும் வேறுபட்டு உள்ளது. * பொதுவாக மீன்களுக்கு நுரையீரல் கிடையாது. மீன்கள் வாய் மூலம் நீரைக் குடித்து கன்னத்திலுள்ள செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகின்றன. * மீன்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன. ஏனென்றால் இவற்றுக்கு இமைகள் கிடையாது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் தூங்குவதில்லை. * மீன்களுக்கு புறச்செவிகள் கிடையாது. அதேசமயம் நீரில் உண்டாகும் அதிர்வுகளைத் துல்லியமாக உணர்ந்து கொள்கின்றன. * காட், சுறா போன்ற மீன்களில...

நம்பினால் நம்புங்கள் 11

* ஒரு அமெரிக்கர் சராசரியாக ஆண்டுக்கு 120 ஆப்பிள் சாப்பிடுகிறார். * நடந்தாலும், ஓட்டப் பயிற்சி செய்தாலும் கிலோமீட்டருக்கு 60 கலோரியே செலவாகும். * கடலின் சராசரி ஆழம் 4.3 கிலோமீட்டர். * ஈபிள் கோபுரம் கோடைக்காலத்தில் வெப்பத்தால் 15 செ.மீ. உயரம் நீள்கிறது. * ஆண்களைவிட பெண்கள் இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள். * அமெரிக்காவில் துரதிர்ஷ்டமாகக் கருதப்படும் கறுப்புப்பூனை, ஜப்பானில் அதிர்ஷ்டமாகக் கொண்டாடப்படுகிறது. * மேற்கத்திய மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் சராசரியாக ஒவ்வொருவரும் தினம் 2 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்துகிறார்கள். * பூமியின் 11 சதவீத நிலப்பகுதி யில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்த அளவு தினந்தோறும் குறைந்து வருகிறது. * சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் 99 சதவீதத்தை சூரியனே கொண்டுள்ளது. * சராசரியாக நாம் வாழ்நாளில் நடந்து செல்லும் தூரத்தைக் கணக்கிட்டால், பூமியை 4 முறை வலம் வரலாம்! * அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் பாதிக்கு மேலான வர்கள் தன்னந்தனியே வாழ்கிறார்கள். * ஃப்ளமிங்கோ பறவைகளின் வித்தியாசமான வண்ணம் அவற்றின் உணவிலிருந்தே கிடைக்கிறது. * நமது இதயம் தினமும் ஒரு...

நம்பினால் நம்புங்கள் 10

* எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைப் பகுதிகளில் கூட, பத்தில் ஒருவர் வாழ்கின்றனர். * பெரும்பாலான பனிச்சரிவுகள், மனிதர்கள் பனிப்பாளங்களைத் தேவையில்லாமல் கையாள்வதாலேயே ஏற்படுகின்றன. * கொரில்லாக்களும் எலிகளும் அதிக ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக, தம் கழிவையே தின்னுவதுண்டு. * பருவநிலை மாற்றங்கள் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பறவைகளின் பறக்கும் வேகமும் கூடியுள்ளது. * எரிமலை சாம்பல் மண்ணுக்கு மிக உகந்தது. எரிமலை வெடிப்புக்குப் பின் அப்பகுதியில் செடிகள் செழிக்கும். விலங்குகளுக்கும் வாழும் சூழல் உருவாகும். * பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் கணக்கிட்டால் தலா 20 கோடி பூச்சிகள் உள்ளன! * தெள்ளுப்பூச்சியால் (Flea) உணவில்லாமல் 100 நாட்கள் வரை வாழ முடியும்! * பச்சோந்தியால் தன் மனநிலைக்கு ஏற்பவும் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும். * புலியால் ஒரேமுறை 27 கிலோ தீனியை உள்ளே தள்ள முடியும். * பழுப்பு வௌவாலால் ஒரு மணி நேரத்தில் கொசு அளவிலுள்ள 1,200 பூச்சிகளைத் தின்ன முடியும்! * வேகத்தையும் சீற்றத்தையும் சற்றும் குறைக்காமலே ஒட்டுமொத்த சமுத்திரத்திலும் பயணிக்க சுனாமியால் மட்டுமே ம...

நம்பினால் நம்புங்கள் 9

* அப்போலோ 13 விண்கலத்தின் கமாண்டர் ஜிம் லோவெல் அவரிடமிருந்த ‘மிஷன் செக்லிஸ்ட்’ ஆவணத்தை 1,72,11,488 ரூபாய்க்கு விற்றுவிட்டார். ‘அதை எப்படி விற்கலாம்’ என நாசா அமைப்பு, ஜிம்மை அதிதீவிர விசாரணைக்கு உட்படுத்தியது. * இந்தியாவில் பேக்கேஜ்டு தண்ணீர் பிசினஸ் மட்டுமே 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடக்கிறது. இது ஆண்டுக்கு 35-40 சதவீதம் அதிகரிக்கிறது. சென்னையில் தினமும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனையாகிறது. இதில் 40 லட்சம் லிட்டர் கேன்களிலும், மீதி பாட்டில் மற்றும் சாஷே பாக்கெட்டுகளாகவும் நிரப்பப்படுகிறது. * அல்காரித கணித முறைப்படி சாலை விபத்துகளைத் தடுக்கும் முறையை ஆராய்ந்து வருகின்றனர் அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி விஞ்ஞானிகள். * சிலந்தியின் சின்னஞ்சிறு உடலின் 80 சதவீதம் பகுதி மூளைகளால் நிரப்பப்பட்டுள்ளது. * உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரம் ஆண்டுக்கு 6.1 சென்டிமீட்டர் வளர்கிறது. அதன் இப்போதைய உயரம் 8,848 மீட்டர்! * அதிக அளவு சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொள்பவர்கள் மிக விரைவில் மூப்பு தோற்றத்தை அடைகிறார்கள். * ஒளி வாயிலாக தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்ளும் உடைகளை உருவாக்கி வருகின்றனர் சீன விஞ்ஞான...

நம்பினால் நம்புங்கள் 8

* பறவைகள் விழுங்கும் மிகச்சிறிய நத்தைகளில் 15 சதவீதம், பறவைகளின் வயிற்றுக்குள்ளே வசதியாகத் தங்கி, உயிரோடு உலகையே சுற்றி வரும்! * பூமியில் ஒவ்வொரு நிமிடமும் 6 ஆயிரம் முறை மின்னல்கள் தோன்றுகின்றன. * 2 மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தில் 500 கலோரிகள் செலவாகிறது. * சூரிய மண்டலம் தோன்றுவதற்கு முன்பே உருவான வைரம், இப்போது ஒரு விண்கல்லில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. * விஞ்ஞானிகள் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஃபிங்கர்பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம், கைரேகை பதிவைக் கொண்டே போதை மருந்து உட்கொண்டிருத்தல், வெடிகுண்டு பயன்படுத்துதல், இதய நோய், அனீமியா ஆகிய விஷயங்களைக் கண்டறிய முடியும். * நம் காதுகளில் உள்ள குறும்பியும், தாடையின் அசைவும் சேர்ந்து, காதுகளில் சேரும் தூசு, அழுக்கு போன்றவற்றை நீக்கி விடுகின்றன. * 2050ம் ஆண்டில், நமது மூளையில் நிறைந்திருக்கும் அத்தனை தகவல்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்துவிட முடியும் எனக் கணித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். * யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84.01 ஆண்டுகள் ஆகும். * நிலப்பரப்பின் அடிப்படையில் கணக்கிட்டால், நெதர்லாந்தையே மிக அதிக சூறாவளிகள் தாக்குகின...

நம்பினால் நம்புங்கள் 7

* உலகிலேயே எண்ணெய் வளம் மிகுந்த நாடு சவுதி அரேபியாதான். அங்கு உலகின் 20 சதவீத (ஏறத்தாழ 26410 கோடி பேரல்) எண்ணெய் பூமிக்கு அடியில் உள்ளது. * ஒரு கண்ணாடி பாட்டில் சிதைவதற்கு 10 லட்சம் ஆண்டுகள் கூட ஆகலாம். பாட்டில்களின் மூலமான சிலிகான் டை ஆக்சைடு மிக நிலையானது, கிரானைட் போல! * ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1000 கோடி டன் கார்பன் வளிமண்டலத்தில் கலக்கிறது. * டின் உணவு கண்டுபிடிக்கப்பட்டதற்கும் அதற்கான ஓபனர் கண்டுபிடிக்கப்பட்டதற்குமான கால இடைவெளி... 45 ஆண்டுகள்! * கடலில் மின்னல் தாக்கும்போது 30 ஆயிரம் ஆம்பியர் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. ஆனால், அருகிலுள்ள மீன் உணர்வதோ சிறு சிலிர்ப்புதான்! * ஏ380 ஏர்பஸ் விமானத்தின் ஒரு இறக்கையின் நீளம் மட்டுமே 79.8 மீட்டர். * பிரபஞ்சத்தின் வடிவம் மற்றும் அது விரிவடைதல் பற்றிய ஆராய்ச்சிக்கு, இன்றும் விஞ்ஞானிகளுக்கு உதவும் முக்கியமான பொருள்... பலூன்! * ஸ்விட்சர்லாந்து விஞ்ஞானிகள் மிகமிகமிகச் சிறிய மருத்துவ ரோபோவை உருவாக்கியிருக்கிறார்கள். 60 நானோமீட்டர் அளவே கொண்ட இந்த ரோபோ, மனித உடலின் தமனிகளுக்குள் நீந்தி, பாதிப்படைந்த ரத்த நாளங்களை ரிப்பேர் செய்யும். 10 லட்சம்...

நம்பினால் நம்புங்கள் 6

* யானைகள் சராசரியாக தினமும் 150 கிலோ உணவு உட்கொள்கின்றன. 180 லிட்டர் நீர் பருகுகின்றன. * கொறிவிலங்குகளில் 1,700க்கும் அதிக இனங்கள் உள்ளன. எலிகள், சுண்டெலிகள், முயல்கள், கினி பன்றிகள் போன்றவை இவ்வினமே! * சராசரி மனிதனுக்கு தினமும் 2 ஆயிரம் கலோரி ஆற்றல் கொண்ட உணவு தேவை. அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் 3,200 கலோரி உட்கொள்கிறார். எத்தியோப்பியாவில் ஒருவருக்கு 500 கலோரி கிடைத்தாலே ஆச்சரியம்தான்! * சராசரியாக, நாம் 10 வினாடிகளில் ஒரு லிட்டர் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். * நமது நரம்புகள் அதிகபட்சமாக நொடிக்கு 120 மீட்டர் வேகத்தில் சமிக்ஞைகளை அனுப்புகின்றன. * நமது ரத்தம் தமனிகள் வழியாக ஒரு நொடிக்கு 1 மீட்டர் தூரம் பயணிக்கிறது. * எஃகைக் காட்டிலும், அதே அளவு எடை கொண்ட எலும்புகள் 5 மடங்கு வலிமையானவை. * யானைக்கு அடுத்து காண்டாமிருகங்களும் நீர்யானைகளும் அதிக எடை கொண்டவை. ஆப்ரிக்க வெள்ளை காண்டாமிருகத்தின் எடை 9 டன் வரை இருக்கும். * மனிதர்கள் வளர்க்கும் குதிரைகளில் மட்டுமே 150 வித்தியாசமான கலப்பினங்கள் உள்ளன. * மூங்கிலில் மிகக்குறைந்த அளவு ஊட்டச்சத்தே உள்ளதால், பாண்டாக்கள் ஒரே நாளில் 15 கிலோ தண்டுக...

நம்பினால் நம்புங்கள் 5

* 2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர், அமெரிக்க ரியாலிட்டி ஸ்டார் கிம் கார்டாஷியன். * ஐபோன் 5ல் இருப்பது 8 மெகாபிக்செல் கேமரா. நமது கண்களில் இருப்பதோ 576 மெகாபிக்செல்ஸ்! * எந்த நேரத்திலும் ஏறக்குறைய 61 ஆயிரம் மனிதர்கள் வானில் பறந்து கொண்டிருக்கிறார்கள். * வலது கண்ணில் இருந்து முதல் கண்ணீர்த் துளி வெளிப்பட்டால் அது ஆனந்தக் கண்ணீர். வலி அல்லது துக்கத்தின்போது முதலில் கண்ணீர் சுரப்பது இடது கண்ணில்! * 2112ல் ஃபேஸ்புக் சமூக இணையதளத்தில், இறந்துபோன மனிதர்களின் 75 கோடி கணக்குகள் இருக்கும்! * இருளில் ஒளிரும் நாய்க்குட்டிகளை குளோனிங் முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். * கூகுள் இணையதளம் ஒரு நொடிக்கு ரூ.37,397 வருமானம் ஈட்டுகிறது. இந்தச் செய்தியை நீங்கள் படித்து முடிக்கும் முன்பே, அது ரூ.1,86,987 பெற்றிருக்கும். கூகுளின் ஆண்டு வருமானம் ரூ.117937,99,56,400. * இரண்டாம் உலகப் போரில் உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்னமும் ஆண்டுக்கு 20 ஆயிரம் டூலிப் மலர்கள் நெதர்லாந்திலிருந்து கனடாவுக்கு அனுப்பப்படுகின்றன. * சராசரி அமெரிக்கரை விட, சராசரி கனடா குடிமகன் செல்வந்தராக இருக்கிறார். * டிஸ...

நம்பினால் நம்புங்கள் 4

* கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் எலிகளே கிடையாது. * எல்லா வகை உயிரினங்களிலும் ஆணை விட பெண்ணே சராசரியாக அதிக காலம் வாழ்கிறது. * சராசரி மனிதன் வாழ்நாளில் 3 ஆண்டுகளை டாய்லெட்டில் கழிக்கிறான். * இதுவரை அறியப்பட்டதில் ஒரே முட்டையில் 9 மஞ்சள் கருக்கள் வரை இருந்துள்ளன . * பெரும்பாலான மனிதர்களால் ஒரே நேரத்தில் 4 விஷயங்களுக்கு மேல் நினைவு வைத்திருக்க முடியாது. * பூமியின் எடை ஒவ்வொரு நாளும் 100 டன் அதிகரிக்கிறது... காரணம் விண்வெளியிலிருந்து விழும் குப்பைகள்! * மூழ்கவே முடியாத சாக்கடலில்கூட, சில உபகரணங்களின் உதவியால் மூழ்க முடியும்! * சகாரா பாலைவனத்தின் சூரிய ஆற்றலில் 0.3 % மட்டுமே ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது. * அமெரிக்காவின் கெண்டகியில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என சட்டமே உள்ளது. * சிப்ஸ் போன்ற பாக்கெட் உணவுப்பொருட்களில் ஏறக்குறைய 68% காற்றே நிரப்பப்பட்டுள்ளது. * பூனைகளைவிட மனிதர்களுக்கு 20 மடங்கு சுவை உணர்வு அதிகம். * குளிர்நீரைவிட சூடான நீர் விரைவாக உறையும். ...

நம்பினால் நம்புங்கள் 3

* இதுவரை நிரூபிக்கப்பட்ட அளவில், மோட் டார் சைக்கிள் எட்டிய அதிகபட்ச வேகம்... மணிக்கு 406.62 கிலோமீட்டர். * ஆரோக்கியமான மனிதரின் சிறுநீரகப்பை சௌகரியமாக தேக்கி வைக்கக்கூடிய அதிகபட்ச சிறுநீரின் அளவு 453 கிராம்      (2கப்). * டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உறிஞ்சுவதில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரமே லேப்டாப்களுக்கு போதுமானது! * புவிவட்ட சுற்றுப்பாதையில் அரை கிலோ எடையை நிலைபெறச் செய்வதற்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகும். * உயரமான கால்பந்து வீரர்களே உயரம் குறைந்தவர்களை விட அதிக ஃபவுல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிறார்கள். * 1965ல் ஜான் யங் என்ற விண்வெளி வீரர் ஜெமினி 3 விண் கலத்தில் ஒரு சாண்ட்விச்சை கடத்திச் சென்றுவிட்டார். பிரெட்டுகளில் ஏற்படும் வேதிமாற்றத்தின் விளைவாக, விண்வெளி நிலையத்திலும் விண்கலத்திலும் மின்கோளாறுகள் ஏற்படும் என்பதால், பூமிக்குத் திரும்பியதும் அவருக்குச் சிறப்பான ‘கவனிப்பு’ நடந்தது! * நீர்நிலைகளின் அடிப்பகுதி யில் 2-3 ஆண்டுகள் கூட்டுப் புழுவாகவே வாழக்கூடிய ‘மே’ பூச்சிகள், கூடு உடைத்து இறகுகள் பெற்று பறக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே வாழ்வை முடித்து...

நம்பினால் நம்புங்கள் 2

* படிப்பதும் கனவு காண்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் தூண்டப்படும் செயல்களாகும். அதனாலேயே நாம் கனவு காணும்போது படிக்க முடிவதில்லை! * சராசரியாக நம் தும்மலின் வேகம் மணிக்கு 96 கிலோ மீட்டர்! * நம் கண்களால் பழுப்பு நிறத்தின் 500 ஷேடுகளைக் கூட பிரித்து அறிய முடியும். * மலேசியாவிலுள்ள ‘நைக்’ தொழிற்சாலையில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களின் மொத்த வருமானத்தை விடவும், ‘நைக்’ அம்பாசிடராக உள்ள மைக்கேல் ஜோர்டான் அதிக பணம் சம்பாதிக்கிறார். * எரேசர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் பென்சில் எழுத்துகளை அழிக்க ரொட்டிதான் பயன்படுத்தப்பட்டது. * உலக மக்கள் தினமும் 5 லட்சம் மணி நேரங்களை இன்டர்நெட் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகளை அடிக்க மட்டுமே செலவழிக்கின்றனர். * அனைத்து துருவக்கரடிகளும் ஆழ்துயில் கொள்வதில்லை. கர்ப்பிணியாக இருப்பவை மட்டுமே அப்படி உறங்குகின்றன. * தேனீயால் தேன் ஏற்கனவே ஜீரணம் செய்யப்பட்டிருப்பதால், நம் உடலிலும் எளிதில் ஜீரணமாகும். * ட்விட்டர் இணையதளத்தில் ஒரு நாளில் எழுதப்படுபவற்றை மட்டும் புத்தகமாக ஆக்கினாலே, ஒரு கோடி பக்கங்கள் தேவைப்படும்! * நூலகங்களில் அதிகம் திருடப்பட்டவை என்ற சாதனையை பட...

நம்பினால் நம்புங்கள் 1

* சென்ற நூற்றாண்டைவிட, இப்போது குழந்தைகள் உறங்கும் அளவு 73 நிமிடங்கள் குறைந்துள்ளது. * அமெரிக்காவில் பீச் பழங்கள் விளையும் வயலில், அவை கடுங்குளிரால் பாதிப்படையாமல் இருப்பதற்காக பிரமாண்ட வைக்கோல் உருளைகளை எரித்து வெப்பக்காற்று வீசச் செய்கிறார்கள். ஆலங்கட்டி மழையால் பழங்கள் உடைவதைத் தவிர்க்க, ஒரு கருவி மூலம் மழை உருவாவதையே தடுக்கிறார்கள்! 10 சதவீதம் மனிதர்கள் கொசுக்களை கவர்ந்து இழுக்கும் வகையிலான வியர்வையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த வியர்வை வாசனையை கொசுக்களால் 30 மீட்டர் தொலைவிலிருந்தே அறிய முடியும்! * ஆப்ரிக்க நாடுகளில் ஐந்தில் ஒரு குழந்தை மரணம், மலேரியா கொசுக்களால் ஏற்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு ஒரு குழந்தையைக் கொல்லும் அளவுக்கு, கொசுக்கள் மலேரியாவை பரப்புகின்றன. அங்கு கொசுக்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு மட்டுமே ஆண்டுக்கு 8 பில்லியன் யூரோ! * இந்த ஆண்டு (2013) பால்வீதி மண்டலத்தை ஆராய்கிற ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கேமராவின் பிக்செல்கள் - 100 கோடி! * மனிதனால் உருவாக்கப்பட்டு விண்வெளிக் குப்பையாக மாறியுள்ள பொருட்கள் / அதன் துண்டுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை 5 லட்சம்! * ரத்தத்தின் கொந்த...