* எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைப் பகுதிகளில் கூட, பத்தில் ஒருவர் வாழ்கின்றனர்.
* பெரும்பாலான பனிச்சரிவுகள், மனிதர்கள் பனிப்பாளங்களைத் தேவையில்லாமல் கையாள்வதாலேயே ஏற்படுகின்றன.
* கொரில்லாக்களும் எலிகளும் அதிக ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக, தம் கழிவையே தின்னுவதுண்டு.
* பருவநிலை மாற்றங்கள் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பறவைகளின் பறக்கும் வேகமும் கூடியுள்ளது.
*
எரிமலை சாம்பல் மண்ணுக்கு மிக உகந்தது. எரிமலை வெடிப்புக்குப் பின்
அப்பகுதியில் செடிகள் செழிக்கும். விலங்குகளுக்கும் வாழும் சூழல்
உருவாகும்.
* பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் கணக்கிட்டால் தலா 20 கோடி பூச்சிகள் உள்ளன!
* தெள்ளுப்பூச்சியால் (Flea) உணவில்லாமல் 100 நாட்கள் வரை வாழ முடியும்!
* பச்சோந்தியால் தன் மனநிலைக்கு ஏற்பவும் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும்.
* புலியால் ஒரேமுறை 27 கிலோ தீனியை உள்ளே தள்ள முடியும்.
* பழுப்பு வௌவாலால் ஒரு மணி நேரத்தில் கொசு அளவிலுள்ள 1,200 பூச்சிகளைத் தின்ன முடியும்!
* வேகத்தையும் சீற்றத்தையும் சற்றும் குறைக்காமலே ஒட்டுமொத்த சமுத்திரத்திலும் பயணிக்க சுனாமியால் மட்டுமே முடியும்.
* நீலத்திமிங்கலம் போகிற போக்கிலேயே பிரமாண்ட மீன் கூட்டங்களை உறிஞ்சி விழுங்கி விடும். ஒரு நாளைக்கு சுமார் 4 டன்!
Comments
Post a Comment