*
7 மணி நேரத்துக்கு குறைவான தூக்கம் மட்டுமல்ல... அதிகமான தூக்கமும் இதயப்
பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என வெஸ்ட் வர்ஜீனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
கூறுகின்றனர்.
* இப்போதைய நிலை தொடர்ந்தால், இன்னும் 30 ஆண்டுகளுக்குள் உலகின் ஹீலியம் இருப்பு காணாமல் போய்விடும்.
*
ஆன்லைனில் நேரம் செலவழிப்பது கடந்த 6 ஆண்டுகளில் சராசரி நபருக்கு இரு
மடங்காக அதிகரித்திருக்கிறது. 2007ல் இந்த போதை ஒரு மாதத்துக்கு 13 மணி 30
நிமிடங்களாகத்தான் இருந்தது. கணிப்பொறித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இது
பொருந்தாது.
* இங்கிலாந்தில் சராசரியாக ஒருவர் ஓராண்டு சாப்பிடும் சாக்லெட்டின் அளவு 9 கிலோ!
* கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும் குழந்தைகளில் 10 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர்.
* உலக சூதாட்ட மார்க்கெட்டின் இன்றைய மதிப்பு 1776600 கோடி ரூபாய்!
* ‘ஆயிரத்தில் ஒன்று’ என்பது ‘பத்தில் ஒன்று’ என்பதை விட மிகப்பெரி யது என 25 சதவீதம் மக்கள் தவறாக நினைக்கின்றனர்!
* ஓராண்டில் நாம் 62 லட்சத்துக்கும் அதிகமான முறை கண் சிமிட்டுகிறோம்!
* இதுவரை அறியப்பட்ட அளவில், பிரபஞ்சத்தில் 1,000,000,000 கேலக்சிகள் உள்ளன!
* உலகில் 5 லட்சத்துக்கும் அதிக நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் உணரப்படுகின்றன.
* போனை இடது காதில் வைத்து பேசுங்கள்!
* மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது!
* மாலை 5 மணிக்கு மேல், வயிறு முட்ட சாப்பிட கூடாது.
* தண்ணீரை காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் குடிக்கவும்!
* தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை.
* மதிய உணவுக்கு பின்பும், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்பும், உடனே
படுக்கக்கூடாது.(குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்)
* உங்கள் செல் போனில்பேட்டரி கடைசி பார்'ல் (low battery) இருக்கும்போது
போன்'னை எடுக்கக்கூடாது. ஏனென்றால், அந்த நேரத்தில் சாதாரண radiation'னை
விட 1000 மடங்கு அதிகம் இருக்கும்!

Comments
Post a Comment