* 2012ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர், அமெரிக்க ரியாலிட்டி ஸ்டார் கிம் கார்டாஷியன்.
* ஐபோன் 5ல் இருப்பது 8 மெகாபிக்செல் கேமரா. நமது கண்களில் இருப்பதோ 576 மெகாபிக்செல்ஸ்!
* எந்த நேரத்திலும் ஏறக்குறைய 61 ஆயிரம் மனிதர்கள் வானில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
*
வலது கண்ணில் இருந்து முதல் கண்ணீர்த் துளி வெளிப்பட்டால் அது ஆனந்தக்
கண்ணீர். வலி அல்லது துக்கத்தின்போது முதலில் கண்ணீர் சுரப்பது இடது
கண்ணில்!
* 2112ல் ஃபேஸ்புக் சமூக இணையதளத்தில், இறந்துபோன மனிதர்களின் 75 கோடி கணக்குகள் இருக்கும்!
* இருளில் ஒளிரும் நாய்க்குட்டிகளை குளோனிங் முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
*
கூகுள் இணையதளம் ஒரு நொடிக்கு ரூ.37,397 வருமானம் ஈட்டுகிறது. இந்தச்
செய்தியை நீங்கள் படித்து முடிக்கும் முன்பே, அது ரூ.1,86,987
பெற்றிருக்கும். கூகுளின் ஆண்டு வருமானம் ரூ.117937,99,56,400.
*
இரண்டாம் உலகப் போரில் உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்னமும்
ஆண்டுக்கு 20 ஆயிரம் டூலிப் மலர்கள் நெதர்லாந்திலிருந்து கனடாவுக்கு
அனுப்பப்படுகின்றன.
* சராசரி அமெரிக்கரை விட, சராசரி கனடா குடிமகன் செல்வந்தராக இருக்கிறார்.
* டிஸ்னிலேண்டில் உள்ள எலிகளைக் கொல்வதற்காக, ஒவ்வொரு இரவும் 200 பூனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
* உலக மக்களில் 7ல் ஒருவர் பசியோடுதான் உறங்கச் செல்கிறார்.
* சீன மக்கள் ஒட்டுமொத்தமாக ஓராண்டு புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை 1.7 ட்ரில்லியன்!
Comments
Post a Comment