*
அப்போலோ 13 விண்கலத்தின் கமாண்டர் ஜிம் லோவெல் அவரிடமிருந்த ‘மிஷன்
செக்லிஸ்ட்’ ஆவணத்தை 1,72,11,488 ரூபாய்க்கு விற்றுவிட்டார். ‘அதை எப்படி
விற்கலாம்’ என நாசா அமைப்பு, ஜிம்மை அதிதீவிர விசாரணைக்கு உட்படுத்தியது.
*
இந்தியாவில் பேக்கேஜ்டு தண்ணீர் பிசினஸ் மட்டுமே 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு
நடக்கிறது. இது ஆண்டுக்கு 35-40 சதவீதம் அதிகரிக்கிறது. சென்னையில்
தினமும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் விற்பனையாகிறது. இதில் 40 லட்சம்
லிட்டர் கேன்களிலும், மீதி பாட்டில் மற்றும் சாஷே பாக்கெட்டுகளாகவும்
நிரப்பப்படுகிறது.
* அல்காரித கணித முறைப்படி சாலை விபத்துகளைத் தடுக்கும் முறையை ஆராய்ந்து வருகின்றனர் அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி விஞ்ஞானிகள்.
* சிலந்தியின் சின்னஞ்சிறு உடலின் 80 சதவீதம் பகுதி மூளைகளால் நிரப்பப்பட்டுள்ளது.
* உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரம் ஆண்டுக்கு 6.1 சென்டிமீட்டர் வளர்கிறது. அதன் இப்போதைய உயரம் 8,848 மீட்டர்!
* அதிக அளவு சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொள்பவர்கள் மிக விரைவில் மூப்பு தோற்றத்தை அடைகிறார்கள்.
* ஒளி வாயிலாக தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்ளும் உடைகளை உருவாக்கி வருகின்றனர் சீன விஞ்ஞானிகள்.
*
இந்திய மக்களில் 7 சதவீதம் பேர் ஏதோ ஒரு மனநலக் குறைபாட்டோடு
வாழ்கின்றனர். ஒரு சதவீதம் பேர் அதீத மனநலப் பிரச்னையில் இருக்கின்றனர்.
* வைட்டமின் பி 12 குறைபாடு - இதுதான் உலகில் மிகப்பழமையான இரண்டாவது பாரம்பரிய நோய். இதற்கு வயது 13,600 ஆண்டுகள்!
*
கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஊட்டச்சத்து சரிவர கிடைக்காமல் இருந்தால்
குழந்தைக்கான கொழுப்புச்சத்தும் குறையும். இதனால் குழந்தைக்கு நீரிழிவு
பிரச்னை கூட ஏற்படலாம் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
கண்டறிந்துள்ளனர்.
Comments
Post a Comment