* சென்ற நூற்றாண்டைவிட, இப்போது குழந்தைகள் உறங்கும் அளவு 73 நிமிடங்கள் குறைந்துள்ளது.
*
அமெரிக்காவில் பீச் பழங்கள் விளையும் வயலில், அவை கடுங்குளிரால்
பாதிப்படையாமல் இருப்பதற்காக பிரமாண்ட வைக்கோல் உருளைகளை எரித்து
வெப்பக்காற்று வீசச் செய்கிறார்கள். ஆலங்கட்டி மழையால் பழங்கள் உடைவதைத்
தவிர்க்க, ஒரு கருவி மூலம் மழை உருவாவதையே தடுக்கிறார்கள்!
10 சதவீதம்
மனிதர்கள் கொசுக்களை கவர்ந்து இழுக்கும் வகையிலான வியர்வையை
வெளிப்படுத்துகிறார்கள். அந்த வியர்வை வாசனையை கொசுக்களால் 30 மீட்டர்
தொலைவிலிருந்தே அறிய முடியும்!
* ஆப்ரிக்க நாடுகளில் ஐந்தில் ஒரு
குழந்தை மரணம், மலேரியா கொசுக்களால் ஏற்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு ஒரு
குழந்தையைக் கொல்லும் அளவுக்கு, கொசுக்கள் மலேரியாவை பரப்புகின்றன. அங்கு
கொசுக்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு மட்டுமே ஆண்டுக்கு 8 பில்லியன்
யூரோ!
* இந்த ஆண்டு (2013) பால்வீதி மண்டலத்தை ஆராய்கிற ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கேமராவின் பிக்செல்கள் - 100 கோடி!
* மனிதனால் உருவாக்கப்பட்டு விண்வெளிக் குப்பையாக மாறியுள்ள பொருட்கள் / அதன் துண்டுகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை 5 லட்சம்!
* ரத்தத்தின் கொந்தளிப்பு பற்றி ஆராய்வதற்காக, லியனார்டோ டா வின்சி கண்ணாடி இதயங்களை உருவாக்கினார்.
* 130 டெசிபலுக்கு அதிக ஒலியைக் கேட்கும்போது மனிதர்களுக்கு காதுவலி ஏற்படும்.
* பூமியில் உள்ளதைவிட 100 மடங்கு இயற்கை வாயு, சனி கிரகத்தின் துணைக்கோளான டைட்டனில் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
Comments
Post a Comment