Skip to main content

Posts

Showing posts from July, 2014

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

தொப்பையை விரட்டுவோம்

உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பது ஆண்களுக்கு கம்பீரத்தையும், பெண்களுக்கு அழகையும் தரும். உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிப்பதில்  அக்கறை கொள்ளவேண்டும். எடை அதிகரித்தால் மூட்டுவலி, இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களும் கூடவே வந்து விடும். இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. உடல் மெலிந்து இருப்பவர்கள் உணவில் எள்ளை அதிகம்  சேர்த்துக்கொண்டால் எடை கூடும். அதுபோல் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளு பயன்படுத்துவது நல்லது. கொள்ளு பருப்பை  ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்டநீர் வெளியேறும். ஊளைச்சதையை குறைக்கும் குணம் கொள்ளுக்கு உண்டு.கொள்ளு பருப்பை வேக வைத்து உண்ணலாம். வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை வேகவைத்து தண்ணீரை குடித்தால் ஜலதோஷம் கட்டுப்படும். அரிசியும் கொள்ளுபருப்பும் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். கொள்ளை  ஆட்டி பால் எடுத்து சூப் வைத்தால் சுவையாக இருக்கும். பொடி செய்து ரசம் வைக்கும் போதும் பயன்படுத்தலாம்சோம்பை அவித்து தண்ணீர்  குடித்தால் எடை குறையும். கேரட்டை துருவி தேன் விட்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப...

108 காயகல்ப மூலிகைகளின் தளபதி வல்லாரை

நினைவாற்றலை பெருக்கும் கிழட்டு தன்மையை தடுக்கும் நினைவாற்றலை பெருக்க வேண்டும் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது ‘வல்லாரை’ தான். ஆனால் வல்லாரைக்கு இதை தவிர வேறு சில  நோய்களை குணப்படுத்தும் சக்தியும் இருக்கிறது. வல்லாரைக்கு ‘சரஸ்வதி’ என்ற பெயரும் உண்டு. ஒருவரை புத்திமானாக்கும் அற்புத சக்தி  இருப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் வல்லாரையை கீரையாகவோ, துவையலாகவோ சமைத்து சாப்பிடுகிறார்கள். இது மிக  நல்லது. வல்லாரையை அப்படியே உலர்த்தி பொடி செய்து மாத்திரையாகவும் தருகிறார்கள். இதன் தாவரவியல் பெயர் Centelle asiatia (linn) Urban.  மண்டூகபரணி, ஆரை, சிங்கி, சண்டகி, குடகம், விக்கிராத்தா, குளக்குறத்தி, குணச்சாலி குணத்தி என்ற பெயர்களும் உண்டு. மலை வல்லாரை, கருவல்லாரை என்ற இருவகைகள் உள்ளன. இது கணுக்களில் வேர்விட்டு தரையோடு படரும் சிறு செடி இனம். இதன் இலைகள்  கரும்பச்சை நிறமாக இருக்கும். வட்ட, அரைவட்ட வெட்டு பற்களுடன் கூடிய கை வடிவ நரம்பு அமைப்புகளுடன் நீண்ட காம்புடைய ஆழமான இதய  வடிவ இலைகளை கொண்டது. இதன் பூ ரோஸ் நிறத்திலும், பழங்கள் சிறிய முட்டை வடிவி...

புற்றுநோய்க்கு நோ என்ட்ரி தரும் ஸ்ட்ராபெர்ரி!

தினமும் உண்டால் பலன்கள் ஏராளம் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது என, கூறுவதை கேட்டிருப்போம். ஏனென்றால் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம், ஆப்பிளையே மிஞ்சும் என அமெரிக்காவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  தெரியவந்த தகவல்தான் இது. வெறும் தகவல் மட்டுமல்ல, உறுதி செய்யப்பட்ட விஷயமும்கூட. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற  பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். கோடை காலத்தில் வெயிலை விட பழங்களின் விலை கடுமையாக உயர ஆரம்பிக்கும். ஏனெனில், தோல் வறட்சியை போக்கவும், இழந்த நீர்ச்சத்தை  ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்த பழங்களே நமக்கு பெரிதும்  உதவுகின்றன. பழங்களில் செல் அழிவை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் பொருட்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தி...

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கம் இன்றியமையாதது. எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதுடன், சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களும் உடல்நலனைப் பாதிக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சாப்பிட்ட பின் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? #சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும். பல சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் புற்றுநோய் ஏற்பட எந்த அளவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டோ, அவ்வளவு பெரிய தீமை இது. #உணவு சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது, அது கெடுதல். அது காற்றை வயிற்றுக்குள் அனுப்பி, வயிறு உப்புசத்துக்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழத்தைச் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி, 2 மணி நேரத்துக்குப் பின்னர் பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். #சாப்பிட்டவுடன் தேநீர் குடிக்காதீர்கள். தேயிலையில் அமிலத்தன்மை உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தைக் கடினமாக்கிச் செரிமானத்தைக் கடினமாக்கும் வாய்ப்பு உண்டு...

என்றும் இளமையாக இருக்க நெல்லிக்காய் சாப்பிடுங்கள்

நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறையானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 1. நோய் வராமலேயே நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. 2.நோய் வாய்ப்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது. சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் முக்கியமான சிகிச்சைகளுள், காயகற்ப சிகிச்சையும் ஒன்று. இந்த சிகிச்சையானது, நோய் வராமலேயே நமது  ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும்  நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான  இடத்தை பிடிப்பது நெல்லிக்காய். மன்னன் அதியமான அவ்வை பாட்டிக்கு நீண்ட ஆயுள் அமையும் பொருட்டு நெல்லிக்கனி கொடுத்ததாக சங்க  இலக்கியங்களில் சொல்லப்படுகிறது. நெல்லிக்கனி ஈரலை தூண்டி நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல்  ஏற்றுக்கொள்ள துணை புரிகிறது. கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல் வளர்ந்து நரைமுடி ...

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு ம ாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ... சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி (தனியா) - அரை கிலோ வெந்தயம் - கால் கிலோ

இதய நோய்களுக்கு பாட்டி வைத்தியம்

1. மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 2. கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 30 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 3. பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 4. வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3), மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும். 5, ஆரைக்கீரை, தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து, ஏலக்காயை (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும். 6, வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 7, வங்கார வள்ளைக் கீரைச் சாறில் பூண்டை (ஒரு பல்) அரைத்துச் சாப்பிட்டால் இதய ந...

தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்

1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. 3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும். 4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது. 5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும். 6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம். 7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம். 8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக...

கண்களை கொஞ்சம் கவனியுங்கள்

பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பொருட்களை கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் என சொல்வது வழக்கம். கண் பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய உறுப்பு. ஏனென்றால், உள்ளத்து உணர்ச்சிகளைப் அப்படியே கண்ணாடி போன்று பிரதிப்பலிப்பவை கண்கள். கண்களில் உண்டாகிற பிரச்னைகள் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, அழகுக்கும் நல்லதல்ல. கண்ணழகு தொடர்பான சில பிரச்னைகளையும், அவற்றிற்கான தீர்வுகளும்... சுருக்கங்கள் மற்றும் கோடுகள்: கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மென்மையாக இருக்கும். சீக்கிரமே வறண்டு போய்விடும். 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டலாம். கண்களைச் சுற்றி ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் செய்யலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களை கசக்கக்கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக்கிவிடும். சுருக்கம் அதிகம் இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் பயன்படுத்தலாம். மோதிர விரலால் மிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம். தேயிலை கொதித்து வைத்த தண்ணீரை வடிகட்டி அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொ...

வீடு, மனை வாங்கப்போறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பா கவனிங்க

சொந்தமாக ஒரு மனை அல்லது வீடு வாங்கிப்போட்டால் என்றைக்காவது உதவும் என்று கருதாதவர்கள் யாருமே இல்லை. அந்த அளவுக்கு வீடும் மனையும் நடுத்தர மக்களின் கனவாக உள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் காலிமனை, கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து குடியிருப்பை வாங்குவதற்கு முன் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளன. நாம் வாங்க உத்தேசித்துள்ள வீட்டுமனை பற்றி முழுமையாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தால், சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்திடம் (சிஎம்டிஏ) அனுமதி பெற்ற வரைபடம் மற்றும் விலை நிர்ணய சான்றையும் சரி பார்க்க வேண்டும். மேலும் இதர நகர பகுதியாக இருந்தால் நகராட்சியின் அனுமதி சான்றை பார்க்க வேண்டும். விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சாலை மற்றும் பூங்கா அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.சாலையோரம் மனை அமைந்திருந்தால், அது உள்ளூர் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படுமா என்பதை அறிய வேண்டும். சிஎம்டிஏவின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பது உட்பட மனைக்கான உரிய ஆவணங்கள், சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதை உறுதி ...

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது." புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!". பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந...

ஆபத்தான பரோட்டா!

பெரும்பாலான சைவ மற்றும் அசைவ ஓட்டல்களில் உணவுப்பொருளாக பரோட்டா விற்பனை செய்வது வழக்கத்தில் உள்ளது. காரணம் மக்கள் மனதில் அந்த அளவுக்கு ஒரு இடத்தினை பிடித்த உணவாக உள்ளது அது. தமிழகத்தில் சிறு கிராமங்களிலும் நிச்சயம் பரோட்டா கிடைக்கும். பல குடும்பங்களில் குழந்தைகளின் இரவு நேர உணவாக அது உள்ளது. இதுபோல அனைத்து வயதினரும் விரும்பும் பரோட்டா ஒரு நல்ல உணவு அல்ல என்கிறார்கள் டாக்டர்கள். அது குறித்த ஆய்வுகளும் அதையே கூறுகின்றன. நன்றாக மாவாக்கப்பட்ட கோதுமை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில் பெராக்சைடு என்ற ரசாயனத்தை பயன்படுத்தி வெண்மையாக மாற்றுகிறார்கள். அதுதான் மைதா. இந்த பென்சாயில் பெராக்சைடு என்பது தலையில் முடி நரைத்தவர்கள் அதனை கருமையாக்க பயன்படுத்தும் ‘டை’ யில் உள்ள ஒரு ரசாயனம். அதுவே மாவில் உள்ள புரோட்டீனுடன் சேரும்போது பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோயை உருவாக்குகிறது. அது மட்டுமில்லாமல் அலோக்ஸன் என்ற ரசாயனம், மாவை மிருதுவாக்க பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் செயற்கை வண்ணம், மினரல் ஆயில், ‘டேஸ்ட் மேக்கர்’, ‘பிரிசர்வேட்டிவ்ஸ்’, இனிப்பு, சாக்ரின...

எஜமானருக்காக உயிரைக் கொடுக்கும் நாட்டு நாய்கள்

“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன. நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு: “எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் ...

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுத ான் ஆச்சரியம். தயவு செய்து கவனியுங்கள்.

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்

 உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். ஆய்வு ஒன்றிலும், நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்கிறது. மேலும் அந்த ஆய்வில் நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது என்றும், தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் என்றும், அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது நம் முன்னோர்கள் சொல்வது போல், "அளவுக்கு மீறினால் அமிர்தமும...

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி...

அல்சரை தவிர்க்க

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...! உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....! உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....! அல்சரை தவிர்க்க.........! ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!மேலும் தயிரில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கொடுக்கக்கூடிய மருந்துப்பொருட்கள் உள்ளது. தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும்மிகவும் நல்லது.......! தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......! குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......! மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......! இது போன்ற பல பயனுள்ள தகவல்களை பார்வையிடுவதற்கு எமது பக்கத்தை லைக் பண்ணுங்கள் ++ Like •••► Vennila FM - வெண்ணிலா எப்.எம் ++" class="scaledImageFitWidth img" height="500" src="https://m....

அறுபதிலும் அழகு தரும் அன்னாசி பழம்

செதில் செதிலான தோலும் முரட்டு இலைகளுமாக கரடு – முரடாக காட்சியளிக்கும் அன்னாசிப் பழத்தில் அள்ள அள்ளக் குறையாத நல்ல பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன. `வைட்டமின் – சி’ நிறைந்த இந்தப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப் பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம். * சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும். * சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. * உதடுகள் அடிக்கடி வறண்டு போய் விடுகிறதா? அன்னாசிப்பழச் சாறு, பீட்ரூட் சாறு இரண்டையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து ஒரு சின்...

ஒரு நிமிடக் கதை: மருமகள்

அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான். ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான் அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டிலிருந்த வேலைக்காரியிடம் “அவ எங்க போய் தொலைஞ்சா...?” என்று கத்தினான். “எனக்கு தெரியாது, சார்!... காலையில யாருக்கோ போன் பண்ணாங்க. உடனே ‘நான் அவசரமா வெளியப் போகணும். நான் வர்றவரைக்கும் பிள்ளைங்களைப் பார்த்துக்கோ’ன்னு மட்டும் சொல்லிட்டுப் போனாங்க!" என்று அவள் சொல்ல உடனே சித்ராவின் ‘செல்’லுக்கு சங்கர் போன் செய்தான். சித்ரா போனை எடுத்ததும், “வீட்ல இல்லாம நீ எங்க போய் தொலைஞ்சே...!?” கடுப்புடன் கத்தினான். “உங்க அப்பாவுக்கு உ...

விஷத்தை விரட்டும் நெல்லிக்கனி

கொழுப்புச்சத்து உடலுக்கு தேவையான ஒன்று. ஆனால் உடலுக்கு தேவைப்படாத கொழுப்பு சத்துக்கள் ரத்தக்குழாயில் சேர்ந்தால் மாரடைப்பு ஏற்படும்.  இதை தடுக்க வைட்டமின் ‘சி‘ நிறைந்துள்ள நெல்லிக்கனியை சாப்பிடலாம்.  நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கிவிட்டு (இரண்டு நெல்லிக்காய்)  மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து குடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர் என்றால், சர்க்கரையை சேர்க்காமல் குடிக்கலாம். இதயக்கோளாறு, நரம்பு  தளர்ச்சி, இளநரை இருப்பவர்கள் நாள்தோறும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வரலாம். கீல்வாதம், நரம்பு தளர்ச்சி, மூளைச்சூடு ஆகியவை குணமாக பாலில் சிறிதளவு நெல்லிச்சாறு கலந்து குடிக்கலாம். நெல்லிக்கனியை உலர்த்தி  பொடியாக்கி உடம்பில் தேய்த்துக் குளித்தால் சொறி, தோல் சுருக்கம் நீங்கும். உலர் நெல்லியை நீரில் போட்டு ஊற வைத்து கண்களை கழுவி வர  கண் நோய்கள் குணமாகும்.  வாய்ப்புண் குணமாக நெல்லி இலையை சிறிது எடுத்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து வாய்  கொப்பளித்தால் போதும். நெல்லிக்கனியை, எலுமிச்சை இலைகளோடு சேர்த்து அரைத்து பாலில் கலந்து நரை முடி மேல் தேய...

இதயத்தை பாதுகாக்க பழங்களை சாப்பிடுவோம்

இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது  இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.  இதய நோய் வந்தால் குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை  நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும். சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை,  காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது. இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன.  அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு  உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது.  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை  என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. “An apple a day, keeps the doctor away”  இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும்.  இதுபோல் புத்தம் புது திராட்சை,  அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும். வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை. நெல்லிக்கனி  இதயத்திற்கு...

மாவிலைத் தோரணம்

நமது வீட்டிலும் கோயில்களிலும் விஷேச நாட்களில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன் : நமது வீட்டில் பண்டிகை நாட்களிலும் ஆலயத்தில் திருவிழாக்காலங்களிலும் என்றால் மாவிலைத் தோரணம் கட்டுவது மரபாக உள்ளது . புதிய மாவிலைகளைப் பறித்து வந்து தோரணம் கட்டுவதற்கு காரணம் , மாவிலைக் காம்பில் உள்ள பால் , காற்றில் கலந்து , நாம் சுவாசிக்கும் போது ஒரு கிருமி நாசினியாகச் செயல்பட்டு தந்து ஒருவரிடம் உள்ள நோய்கிருமி மற்றவர்களுக்குப் பரவாமலும் தொற்று நோய் ஏற்படாமலும் தடுக்கிறது . மேலும் , மாவிலையைக் கலசத்தில் வைத்து , மந்திரம் சொல்லி புரோஷித்துக் கொள்வதற்கும் இதுவே காரணம் . செவ்வாய்கிழமையும் , சனிக்கிழமையும் மாவிலைத் தோரணம் கட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம் . கட்டப்பட்ட தோரணத்தைக் காய்ந்து உதிரும் வரை அவிழ்க்கக் கூடாது . மாவிலைத் தோரண மகிமையை விட மருத்துவ மகிமை அதிகமானது . மாவிலைக்குத் துவர்ப்பு உண்டாவதால் நாடி நரம்புகளையும் , தசைநார்களையும் சுருக்கி ரத்தம் வடிதல் முதலியவற்றை நிறுத்தக் கூடிய சக்தி உடையது . மாந்தளிர் இலைகளைச் சேகரித...

தாய்ப்பாலின் மகத்துவம்

பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால் தான். அதற்கு இணையான உணவு வேறு எதுவுமே இல்லை. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருந்தாலும் அதற்கு அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்திகளும் தாய்ப்பாலிலேயே கிடைத்து விடுகின்றன. குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 அல்லது 3 ஆண்டுகள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். அதனால் குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக இருப்பார்களே தவிர குறை ஒன்றும் ஏற்படாது. அப்படி தாய்ப்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடாலோ, தொற்று நோயாலோ மரணம் ஏற்படாது. அதே நேரத்தில் தாய்ப்பாலை குறைவாக குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த வகையில் மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தை பிறந்தவுடன் தண்ணீர், காய்ச்சிய நீர், சர்க்கரை கலந்த நீர், தேன், விளக்கெண்ணெய், கழுதைப் பால், ஆட்டுப்பால் கொடுப்பது, கழுதை ரத்தத்தை நாக்கில் தடவுவது, தங்கத்தால் நாக்கை தடவுவது போன்ற செயல்கள் செய்யவே கூடாது. அவ்வாறு செய்வது தொற்று நோய் கிருமிகளை நாமே ...