ஒரு மனை அல்லது வீடு வாங்கிப்போட்டால் என்றைக்காவது உதவும் என்று
கருதாதவர்கள் யாருமே இல்லை. அந்த அளவுக்கு வீடும் மனையும் நடுத்தர மக்களின்
கனவாக உள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் காலிமனை, கட்டுமான
நிறுவனங்களிடம் இருந்து குடியிருப்பை வாங்குவதற்கு முன் முக்கியமாக
தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளன. நாம் வாங்க உத்தேசித்துள்ள
வீட்டுமனை பற்றி முழுமையாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னை
மாநகரத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தால், சென்னை பெருநகர வளர்ச்சி
கழகத்திடம் (சிஎம்டிஏ) அனுமதி பெற்ற வரைபடம் மற்றும் விலை நிர்ணய
சான்றையும் சரி பார்க்க வேண்டும்.
மேலும் இதர நகர பகுதியாக
இருந்தால் நகராட்சியின் அனுமதி சான்றை பார்க்க வேண்டும். விவரங்களை
தெரிந்து கொள்ள வேண்டும். சாலை மற்றும் பூங்கா அமைக்க கையகப்படுத்தப்பட்ட
நிலமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.சாலையோரம் மனை அமைந்திருந்தால், அது
உள்ளூர் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படுமா என்பதை அறிய வேண்டும்.
சிஎம்டிஏவின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு உள்ளனவா என்பது
உட்பட மனைக்கான உரிய ஆவணங்கள், சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதை உறுதி செய்ய
வேண்டும். மேலும் மனை வாங்கிய இடத்தில் வீடு கட்டிய பின் எதிர்காலத்தில்
ஏதேனும் காரணத்துக்காக வீடு இடிக்கப்படுதல் போன்ற பிரச்னை வராமல்
இருக்குமாறு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கட்டுமான நிறுவனம் அல்லது
தனியாரிடம் இருந்து வீடு வாங்குவதற்கு முன் அந்த இடத்தில் வீடு
கட்டுவதற்கு முறையான வரைபட அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள
வேண்டும். கட்டுமானம் நிறுவனம் அனுமதி வாங்கியபடி வீட்டை திட்டமிட்டு
கட்டியுள்ளதா அல்லது ஏதேனும் விதி மீறல் நடந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ள
வேண்டும்.குடியிருப்பின் உண்மையான உரிமையாளர் மற்றும் அதன் பங்குதாரர்கள்
குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளதா
என்பதுடன், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின் சிஎம்டிஏ முழுவதும் சோதனை
செய்துவிட்டதா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.மேலும் மனையோ அல்லது வீடோ
வாங்குவதற்கு முன் அது குறித்து சிஎம்டிஏவிடம் தொடர்பு கொண்டு சந்தேகங்கள்
உட்பட நமக்கு தேவையான எல்லா விவரங்களையும் கேட்டு தெரிந்து கொள்வது
மிகவும் முக்கியம்.தனி வீடோ அல்லது அடுக்குமாடியில் வீடோ வாங்கும்போது
அல்லது காலி மனையில் பில்டரை வீடு கட்டித் தரச் சொல்லும்போது அவருடன் ஓர்
அக்ரிமென்ட் போடுவது அவசியம். சில பில்டர்கள் இந்த அக்ரிமென்டை அவர்களின்
லெட்டர் பேடில் பிரின்ட் செய்து தருகிறார்கள்.
எந்த ஓர்
அக்ரிமென்டும் குறைந்தபட்சம் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில்தான் எழுத
வேண்டும்.பட்டா இல்லாத வீடு என்பது புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டது.
இந்த மனை மற்றும் வீடு யாருக்கு சொந்தம் என தெரியாது. இதை வாங்கினால்
வங்கிக் கடன் பிளான் அப்ரூவல் போன்ற எதுவும் கிடைக்காது. எனவே பட்டா
இல்லாத வீட்டை வாங்குவதை தவிர்ப்பது நல்ல செயல். இல்லை என்றால்
தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்தான்
வீணாகிவிடும். எனவே வீடோ மனையோ வாங்குபவர்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ள
வேண்டியது அவசியம்.
Comments
Post a Comment