பெரும்பாலான சைவ மற்றும் அசைவ ஓட்டல்களில்
உணவுப்பொருளாக பரோட்டா விற்பனை செய்வது வழக்கத்தில் உள்ளது. காரணம் மக்கள்
மனதில் அந்த அளவுக்கு ஒரு இடத்தினை பிடித்த உணவாக உள்ளது அது. தமிழகத்தில்
சிறு கிராமங்களிலும் நிச்சயம் பரோட்டா கிடைக்கும். பல குடும்பங்களில்
குழந்தைகளின் இரவு நேர உணவாக அது உள்ளது. இதுபோல அனைத்து வயதினரும்
விரும்பும் பரோட்டா ஒரு நல்ல உணவு அல்ல என்கிறார்கள் டாக்டர்கள். அது
குறித்த ஆய்வுகளும் அதையே கூறுகின்றன.
நன்றாக மாவாக்கப்பட்ட கோதுமை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பென்சாயில்
பெராக்சைடு என்ற ரசாயனத்தை பயன்படுத்தி வெண்மையாக மாற்றுகிறார்கள். அதுதான்
மைதா. இந்த பென்சாயில் பெராக்சைடு என்பது தலையில் முடி நரைத்தவர்கள் அதனை
கருமையாக்க பயன்படுத்தும் ‘டை’ யில் உள்ள ஒரு ரசாயனம். அதுவே மாவில் உள்ள
புரோட்டீனுடன் சேரும்போது பெரும்பாலானவர்களுக்கு சர்க்கரை நோயை
உருவாக்குகிறது.
அது மட்டுமில்லாமல் அலோக்ஸன் என்ற ரசாயனம், மாவை மிருதுவாக்க
பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் செயற்கை வண்ணம், மினரல் ஆயில், ‘டேஸ்ட்
மேக்கர்’, ‘பிரிசர்வேட்டிவ்ஸ்’, இனிப்பு, சாக்ரின், ‘அஜினோ மோட்டோ’ போன்ற
பொருட்களும் பரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மாவுடன் சேர்க்கப்படுகின்றன.
அலோக்ஸன் என்ற வேதிப்பொருள், சோதனைக்கூடங்களில் பயன்படுத்தும் எலிகளுக்கு
நீரிழிவு நோயினை உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அது மாவுடன்
சேருவதால் மனிதனுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது.
மைதாவில் தயாரிக்கப்படும் பரோட்டா செரிமானத்துக்கு உகந்தது அல்ல. காரணம்
மைதாவில் நார்ச்சத்து கிடையாது. அதனால் இரவு நேரங்களில் அதனை கண்டிப்பாக
சாப்பிடக் கூடாது. குழந்தைகளுக்கும் கொடுக்கக்கூடாது. மைதாவில் இருந்து
பரோட்டா மட்டுமில்லாமல் கேக்குகளும் தயார் செய்யப்படுகின்றன. எனவே அதுபோன்ற
உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. முடியாத நிலையில் கூடிய வரையில்
குறைத்துக் கொள்ளலாம். அல்லது கோதுமை மாவில் வீட்டிலேயே பரோட்டா தயார்
செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
மேலை நாடுகளில் மைதாவின் மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை
செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மைதாவினால் சீறுநீரகங்களில் கல்,
இருதயக் கோளாறு, நீரிழிவு போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கேரள
மாநிலத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுகுறித்து எவ்வித விழிப்புணர்வும்
ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் நகரங்களில் மட்டுமின்றி
கிராமங்களிலும் இரவு நேர உணவாக பரோட்டா கொடி கட்டிப்பறக்கிறது.
Comments
Post a Comment