இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?’ மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான். “எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு. “அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.” “அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம்? கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்கார வச்சு சோறு போட்ட பையன் இப்ப வேலைக்கு அனுப்பியிருக்கான்னா அப்படித்தானே நெனைக்கத் தோணுது?” “அவங்க யாரும் என்னை வேலைக்கு அனுப்பலை. நானாத்தான் வந்தேன்.” “ஏண்டா வயசான காலத்துல பணம் சம்பாதிக்கற ஆசை வந்திடுச்சா?” “அதெல்லாம் இல்லடா. உனக்குத் தெரியும், எங்க வீட்ல மொத்தமே ஒரு ரூமும் ஒரு கிச்சனும்தான்னு. பையனுக்கு இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. முன்னாடின்னா நானும் என் பையனும் மட்டும்தான் வீட்டுல இருப்போம். இ...
Useful Information