Skip to main content

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன்















இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த
மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன்
தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?’ மனதில்
கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான்.


“எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு
இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக
கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு.




“அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.”


“அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம்?
கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்கார வச்சு சோறு போட்ட பையன் இப்ப வேலைக்கு
அனுப்பியிருக்கான்னா அப்படித்தானே நெனைக்கத் தோணுது?”


“அவங்க யாரும் என்னை வேலைக்கு அனுப்பலை. நானாத்தான் வந்தேன்.”


“ஏண்டா வயசான காலத்துல பணம் சம்பாதிக்கற ஆசை வந்திடுச்சா?”


“அதெல்லாம் இல்லடா. உனக்குத் தெரியும், எங்க வீட்ல மொத்தமே
ஒரு ரூமும் ஒரு கிச்சனும்தான்னு. பையனுக்கு இப்பத்தான் புதுசா கல்யாணம்
ஆகியிருக்கு. முன்னாடின்னா நானும் என் பையனும் மட்டும்தான் வீட்டுல
இருப்போம். இப்ப புது மருமக வந்திட்டா. ஒரு ரூம் எப்படி பத்தும்? என்னை
திண்ணையில படுக்க வைக்க என் பையன் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது. அவனோட
சந்தோஷத்த கெடுக்க என் மனசு இடங்கொடுக்க மாட்டேங்குது, அதான் அவன் சொல்லச்
சொல்ல கேட்காம இந்த நைட் வாட்ச்மேன் வேலைக்கு வந்துட்டேன். சம்பளமும்
கிடைக்குது, புள்ளைங்களோட சந்தோசமான வாழ்க்கைக்கு இடைஞ்சல் பண்ணாம
இருக்கறோம்கற மன நிறைவும் கிடைக்குது. அதுக்குத்தான் கொஞ்ச காலத்துக்கு
இந்த வாட்ச்மேன் வேஷம் புரியுதா?” என்றார் தங்கராசு.






Comments

Popular posts from this blog

Best Blog Directory And RSS Submission Sites

The RSSTop55 is my personal selection of the best blog and RSS directories and search engines that you can find on the web. Over the years, I have spent so much time in updating and refining it that the original list has grown to feature almost 400 directories and search engines, which make up for a truly unique collection of venues that you can use to promote your website. Photo credit: juliengron Why this list is so valuable to you and what are its key advantages compared to other lists dealing with the same topic? The RSSTop55 is updated weekly. New directories are added and I check persistently whether some old directories have headed to the deadpool, changed topic of interest, become a spam site, etc., so that this collection remains always of high-value. All directories are briefly reviewed, so that you can have a quick glance at each one of them and evaluate immediately if a directory is a good promotional venue for your website or business, without spen...

Make Money Online: Anyone And Everyone

If you’re a blogger or a internet marketer or even a beginner then you already know that it’s POSSIBLE to make money online. And what’s interesting about it is that, there are a lot of ways to make money online – from selling ads, e-books, affiliate marketing, freelance writing, podcasting, consulting, designing, coding, etc. So I’m going to highlight some of those online income streams but don’t expect overnight success because creating an income stream requires a lot of work and patience. But if you are a beginner and clueless about where to start then this should help you to focus on that. If you have any trouble with any of these options then leave a comment below or you can e-mail me and I’ll do my best to find the best resource to help you. Make Money Online With Your Website Do you have a website or a blog? If so, then then selling advertisements is the easiest way to make money online. Since there are tons of ad networks on the Internet you have to m...

How To Submit Blogger Sitemap To Google Webmaster Tools

Hi all of my friends, (prem). Today I am telling you how to submit a sitemap to Google Webmaster tools. Before going to today's tutorial, some discussion about Google webmaster. Why you submit a sitemap? This is the question? I will tell you guys how this is effect on your tariff. Bloggers say, “If you are not on Google, you are almost invisible to the world”, yes this is rightly said because if your blog is not submitted to Google Webmaster tools, there is high tendency that all you blog post might not get indexed on Google search engine and this might make you become invisible to the world despite your hard work. My blog almost had 25% increase of traffic from Google after submitting my blog to Google Webmasters Tool, Indexed my new post quickly and improve crawl rate.