படம்: எஸ்.ஆர்.ரகுநாதன் ரத்தம் என்பது நமது உயிர் இயந்திரம் இயங்கத் தேவையான அடிப்படை அம்சம். அது எல்லோருக்கும், எந்த வயதினருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம். விபத்து, அறுவை சிகிச்சை, நோய் எனப் பல காரணங்களுக்காக ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், திரைப்படங்களில் காட்டப்படுவது போல, ஒருவரின் கையில் இருந்து ரத்தத்தை எடுத்து இன்னொருவருக்கு நேரடியாகக் கொடுப்பது என்பதெல்லாம் நிஜத்தில் எந்தக் காலத்திலும் முடியாது. அப்படியானால், விபத்தில் அடிபட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி ரத்தம் கொடுப்பது? ரத்த வங்கிகள் ரத்தத்தைப் பெற்று, அதைப் பாதுகாப்பாகச் சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் தரும் பணியை ரத்த வங்கிகள் செய்துவருகின்றன. அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்று, ரத்தம் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவும் அமைப்புதான் ரத்த வங்கி. ரத்தத்தில் நான்கு வகைகள் உள்ளன. ஏ, பி, ஓ, ஏபி ஆகியவையே அவை. இதிலும்கூட ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், பி பாசிட்டிவ், பி நெகட்டிவ், ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ்...
Useful Information