
ரயில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். அது எதைக் குறிக்கிறது என தெரியுமா..?
முதல் இரண்டு எண்கள் அந்த பெட்டி எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாகும் .
மீதியுள்ள எண்கள்அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த பெட்டிகளில் , அந்த கோச் எத்தனையாவதாக தயாரிக்கப்பட்டது என்பதனை குறிக்கிறது.
உதாரணமாக படத்தில் காண்பிக்கும் முதல் இரண்டு எண்கள் 98 - அது அந்த கோச் 1998 ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பின்னால் இருக்கும் 337 என்ற எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட அந்த பெட்டியின் எண்ணாகும்.
படத்தில் காண்பது 1998 ஆம் வருடம் தயாரிக்கப்பட்ட 337 வது பெட்டியாகும்...
Comments
Post a Comment