Skip to main content

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

மூல நோய் சிகிச்சை விளக்கம்


Piles tamil nadu moolam pavuthiran aasana vai vedippu specialist dr.senthil kumar vivekanantha clinic velachery, chennai, panruti, villupuram.

மூல நோய் 
ஆசன வாயில் உள்ள மலக்குடலில் ஏற்படும் வீக்கம் மூலம் எனப்படும்,
ஆசன வாயில் எரிச்சல், அரிப்பு, நமச்சல், வலி, ஆகிய அறிகுறி தென்படும்.
மலமானது இறுகி சாதாரணமாக வெளியேற முடியாமல் அதனை முக்கி வெளியேற்ற முயலும் போது மலத்துடன் குருதியும் வெளிவரும். இதுவே மூலநோயின் அறிகுறிகள்.
மூலத்தின் வகைகள்
யூகி முனிவர் சொல்படி பார்த்தால் 21 வகையான மூல பாதிப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றில் நீர்முளை,  செண்டு முளை, எருவாய் முளை, சிறுமுளை, வறன் முளை, குருதி முளை, சீழ்முளை, ஆதி முளை, தமரக முளை,  மழி முளை, கழல் முளை, ஐய முளை,  முக்குற்றமுளை,  வினை முளை,  மேக முளை,  குதமுளை  என்பவை  குறிப்பிட்ட சில  மூல வகைகள் ஆகும். 
மூல நோயின் அறிகுறி,
  • மலம் இறுகி எளிதில் வெளியேறாது,
  • அடிக்கடி சிறுகச் சிறுக வயிறு. மற்றும் ஆசன வாயில் வலி, எரிச்சலுடன் மலம் கழித்தல்.
  • மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்.
  • மூல சதை வெளித்தள்ளுதல்.
  • மலம் கழித்த பின்பு ஆசனவாயில் தாங்க முடியாத எரிச்சல் மற்றும் வலி குறைந்தது ஒரு மணி நேரம் கூட நீடிக்கலாம்.
  • ஆசன வாயில் கட்டை போட்டு அடைத்தது போன்ற உணர்வு.
  • காற்று வெளியேறாமை,
  • வயிறு இரைதல், ,
  • பசியின்மை,
  • உண்ட உணவு செரிமானமின்மை,
  • புளித்த ஏப்பம்,
  • நீர் பானமாக ஏதாவது அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கின்ற விருப்பம், உடல் மெலிந்து கொண்டே வருதல்,போன்றவை எல்லாம் மூல நோயின் அறிகுறிகளாகும்.
 
மூலநோய் காரணம்
  • கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிக அளவில் மிளகு, மிளகாய், இஞ்சி போன்ற மசாலா வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு எல்லாம் மூல பாதிப்பானது வருவதற்கு வாய்ப்புள்ளது.
  • எப்பொழுதும் உட்கார்ந்த நிலையிலேயே பணிபுரிபவர்களுக்கு வரலாம்,
  • உடல் பருமனானவர்களுக்கு வரலாம்,
  • உஷ்ணமான உணவுகள், அசைவ உணவுவகைகள், அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
  • சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் மூல நோய் ஏற்படலாம். ஆனால் கர்ப்பக் கால மூலநோயானது பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். சில பெண்களுக்கு மட்டும் இதன் பாதிப்பு தொடர்ந்து இருக்கும்.
  • மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
  • உடம்பிற்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கமற்றவர்கள்.
  • கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவினை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள்.
  • நார்சத்து உள்ள காய்கள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள்,
  • உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அற்றவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.
  • மலச்சிக்கலால் மலக்குடல் சுருங்கி அதில் வீக்கம் ஏற்பட்டு மலம் இறுகி அதனால் புண், அரிப்பு ஏற்படும்.
  • மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச்சிக்கல்தான்.
  • உடல் உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவுகள், சிக்கன் மற்றும் பாஸ்ட்புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற்பட்டு விடும்.
 
அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம். எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான். குறிப்பாக பைல்ஸ் வந்துவிட்டால், அதனை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான மருந்துகளையும் உட்கொள்ளலாம். இல்லையெனில் ஒருசில வீட்டு மருந்துகளைக் கொண்டும் சரிசெய்யலாம். இப்போது அந்த பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.                      பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!! மருத்துவம்

முள்ளங்கி ஜூஸ் பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.
மாதுளை தோல் இந்த சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ் நீர் வறட்சியும் பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, பைல்ஸ் சரியாகிவிடும்.
அத்திப்பழம் அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.
வெங்காயம் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.
சரியான நிலை மலம் கழிக்கும் போது சரியான நிலையில் லேசாக அடிவயிற்றை அழுத்தும் படியாக உட்கார்ந்து செல்ல வேண்டும். அவ்வாறு சரியான நிலையில் உட்கார்ந்து செல்வதால், மலக்குடலுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுத்து, கஷ்டப்பட்டு செல்ல வேண்டி இருக்காது. இதனால் பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
உடற்பயிற்சி மலச்சிக்கலை தடுத்து, இரத்த சுழற்சியை சீராக்க, தினமும் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் மிகவும் கடினமாக இருக்கும் உடற்பயிற்சியான எடை தூக்குதல் போன்றவற்றை செய்யவே கூடாது. அதற்கு பதிலாக வாக்கிங், ஜாக்கிங், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மஞ்சள் மசாலா பொருட்களில் காயங்களை குணப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. எனவே மஞ்சளை சூடான நீரில் கரைத்து, தினமும் குடித்து வந்தால், பைல்ஸ் இயற்கையாக சரியாகிவிடும்.

வாழைப்பழம் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதிலும் இதை இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மறுநாள் காலையில் எந்த ஒரு கஷ்டமுமின்றி கழிவுகளை வெளியேற்றலாம்.

பருப்பு வகைகள் பருப்பு வகைகளில் காராமணி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

Best Blog Directory And RSS Submission Sites

The RSSTop55 is my personal selection of the best blog and RSS directories and search engines that you can find on the web. Over the years, I have spent so much time in updating and refining it that the original list has grown to feature almost 400 directories and search engines, which make up for a truly unique collection of venues that you can use to promote your website. Photo credit: juliengron Why this list is so valuable to you and what are its key advantages compared to other lists dealing with the same topic? The RSSTop55 is updated weekly. New directories are added and I check persistently whether some old directories have headed to the deadpool, changed topic of interest, become a spam site, etc., so that this collection remains always of high-value. All directories are briefly reviewed, so that you can have a quick glance at each one of them and evaluate immediately if a directory is a good promotional venue for your website or business, without spen...

Make Money Online: Anyone And Everyone

If you’re a blogger or a internet marketer or even a beginner then you already know that it’s POSSIBLE to make money online. And what’s interesting about it is that, there are a lot of ways to make money online – from selling ads, e-books, affiliate marketing, freelance writing, podcasting, consulting, designing, coding, etc. So I’m going to highlight some of those online income streams but don’t expect overnight success because creating an income stream requires a lot of work and patience. But if you are a beginner and clueless about where to start then this should help you to focus on that. If you have any trouble with any of these options then leave a comment below or you can e-mail me and I’ll do my best to find the best resource to help you. Make Money Online With Your Website Do you have a website or a blog? If so, then then selling advertisements is the easiest way to make money online. Since there are tons of ad networks on the Internet you have to m...