
1. நெஞ்சுவலி வந்தவுடன் ஒரு கரண்டி சுத்தமான தேன் உட்கொள்ள, வலி வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
2. மிளகுக் கஷாயத்துடன் தேனைக் கலந்து உட்கொள்ள, அஜீரணம் குணமாகும்.
3. குழந்தைகள் சளி, ஜலதோஷத்தால் அவதிப்பட்டால் மாதுளம் பழச்சாறுடன், சிறிது தேனைக் கலந்து கொடுக்கவும்.
4. குப்பைமேனி இலையின் சாறுடன், தேனைக் கலந்து கட்டிகளின் மீது தடவினால், கட்டிகள் உடைந்து குணமாகும்.
5. நெருப்பு காயத்திற்கு தேன் உகந்தது.
6. உணவு உண்டவுடன் ஒரு கரண்டித் தேன் அருந்தினால், உடல் சீராக இருக்கும். உடல் பருக்க இரவு படுக்குமுன், பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
7. விளாம்பழச் சாறும், தேனும் இருமலை நிறுத்தும்.
8. வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வெந்தயத்துடன், அரை கப் தயிர் குடித்தால், உஷ்ணம் தணிந்து மலச்சிக்கல் ஏற்படாது. நீராகாரமும், வெந்தயமும், தினம் காலையில் அருந்துவதும் நல்லது.
9. குளவி கொட்டிய இடத்தில், சுண்ணாம்பு அல்லது வெங்காயத்தை தடவவும்.
10. கடுகு, மஞ்சள், ஓமம் முதலியவற்றை அரைத்து, நகச்சுற்றின் மேல் கட்டினால், வலி குறையும்.
11. வாய்ப்புண்ணுக்கு கடுக்காயை வாயில் ஒதுக்கி வைக்க, புண் விரைவில் ஆறும்.
12. கால் வெடிப்பு உள்ளவர்கள், குளிக்கும் போது காலை தேய்த்துக் குளிக்கவும். மஞ்சள் தேய்த்துக் குளித்தால், கால் வழுவழுப்பாக ஆகிவிடும்.
13. வாரம் ஒரு முறையாவது உணவில் பூண்டை சேர்த்துச் சாப்பிடவும்.
Comments
Post a Comment