உண்ணும் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை
பாதுகாப்பவைகளாகவே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நாம் தினமும் உணவில்
கட்டாயமாக சேர்த்துக்கொள்ளும் கறிவேப்பிலையை சொல்லலாம்.
சளி: நீங்கள் சளி தொல்லையால் அதிகம் அவதிபடுபவரா? கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
கண் பார்வை: பார்வையில்
பிரச்சனை உள்ளவர்கள் நாம் உண்ணும் உணவில் சேர்த்திருக்கும் கருவேப்பிலையை
தூக்கி எறியாமல் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை
பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
இனிய குரல்: பச்சை கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் குரல் இனிமையாகும்.
எடை குறைவு:
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில்
சிறிதளவு கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியுள்ள
கொழுப்புக்களானது கரைந்து உடல் உடை குறைய ஆரம்பிக்கும்.
நீரிழிவு: நீரிழிவு
நோயாளிகள் அதிகளவு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். மாத்திரையின்
அளவை குறைக்க தினமும் காலை மற்றும் மாலையில் 10 கறிவேப்பிலை இலையை
சாப்பிட்டு வந்தால் மாத்திரையின் அளவை பாதியாக குறைக்கலாம்.
வெள்ளை முடி: வெள்ளைமுடியை
தடுக்க கறிவேப்பிலைகளை போட்டு காய்ச்சிய எண்ணெயை தினமும் தலைக்கு தடவி
வந்தால் பரம்பரை நரை முடி வருவதைக்கூட தடுக்கலாம்.
உடல் சூடு: கறிவேப்பிலையை
தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி, பின் அந்த எண்ணெயை தினசரி
தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூட்டை கட்டுபடுத்தி உடலுக்கு குளிர்ச்சியை
தரும்.
இதயநோய்: கறிவேப்பிலை
இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும்தன்மை கொண்டதால் இதனை உணவில்
அதிகம் சேர்த்து வர, இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கும்.
புற்றுநோய்:
கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது புற்றுநோய்
செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொன்றுவிடும்
ஆற்றல் மிக்கது.
வயிற்றில் பிரச்சனையா? உடனே அரை தம்ளர் மோரில்
சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு போட்டு அதனுடன் கொஞ்சம் பெருங்காய
பொடியும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் போட்டுக்கலக்கிக் குடியுங்கள்.
அடுத்த அரை மணியில் முகம் பிரஸன்னவதமாகிவிடும். உடலில் எந்த உறுப்பில்
சுலுக்கு ஏற்பட்டாலும் உடனே நிவாரணம் பெற, சுலுக்கு ஏற்பட்ட இடத்தில்
வெந்நீர் ஒத்தடம் கொடுத்து தேக் கரண்டியளவு தேங்காய் எண்ணெயைக்காய வைத்து,
அதில் சிறிதளவு மிளகுத் தூளையும் கற்பூரத்தையும் போட்டுக் கலக்கி
சுலுக்குள்ள இடத்தில் பூசினால் சுலுக்கு மலுக் கென்று விட்டு விடும்.
பெண்களுக்கு
40 வயதில் மாதவிடாய் தொல்லை இருப்பது சகஜம். ராகி மாவை அரைத்து
வைத்துக்கொண்டு காலையில் கஞ்சி வைத்து மோர், உப்பு சேர்த்து அல்லது பால்
சர்க்கரை விட்டுக் குடித்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் குடிப்பது நல்லது. எதிர்ப்போக்கு கட்டுபடும். தினமும் காலையில்
எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் சுத்தமான குளிர்நீர் பருக
வேண்டும். இது சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் தரும் வயிறும்
சுத்தமாகும்.
காய்கறிகளை நறுக்கும் போது விரலை பதம் பார்த்து
விட்டீர்களா? காயம் பட்ட இடத்தைத் துடைத்து விட்டு தேனைத் தடவுங்கள். ஒரே
நாளில் காயம் சூறிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள்
தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். காலில் உளைச்சல்
இருக்கும் போது தைலங்களை காலில் தடவாமல் உள்ளங்காலில் அதாவது பாதத்தில்
நன்கு அழுத்தித் தேய்த்தால் வீர்ரென்று ஏறி வலி உடனே குறையும்.
மாதவிடாய்
வரக்கூடிய நாட்களுக்கு 4 அல்லது 5 நாட்கள் முன்னதாகவே சிறிது முருங்கை
இலை, சீரகம் சேர்த்து அரைத்து சாறெடுத்து வெறும் வயிற்றில் மூன்று நாட்கள்
தொடர்ந்து குடிக்க வயிற்றுவலி மட்டுப்படும். இரவில் மீந்த சாதத்தில் ஒரு
சுக்கு துண்டைப்போட்டு கொதிக்க வைத்த ஆறிய வெந்நீரை ஊற்றி வைத்து மறுநாள்
நீருடன் அந்த சாதத்தை சாப்பிட்டால் வாதம், பித்தம், தாகம் நீங்கும். நல்ல
பசியும் ஏற்படும்.
நாற்பது வயதா லேசான தலைசுற்றல் வரும். இதை தடுக்க
சந்தனம், கொத்துமல்லி விதை, நெல்லி வற்றல் மூன்றையும் சமஅளவு சேர்த்து
இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் குடித்தால் தலை
சுற்றல் நிற்கும். வாரம் இருமுறை நாம் தினசரி சமைக்கும் கீரை மசியல்
அல்லது பொரியலுடன் கீழாநெல்லிக் கீரையையும் உருவி சேர்த்து புளி
சேர்க்காமல் கலந்து செய்து விடுங்கள். இதுபோல வாரம் ஒரு முறையாவது
இக்கீரையை சேர்த்துக்கொண்டால் மஞ்சள்காமாலை நோய் வரும் என்ற பயமே
வேண்டாம்..
அஜீரணத்திற்கு இரண்டு கரண்டி கருவேப்பிலைச் சாறை ஒரு
கிளாஸ் மோரில் கரைத்துக் குடித்தால் போதும். அஜீரணம் நீங்கி விடும். சுக்கை
பொடி செய்து இரண்டு தம்ளர் மோரில் கருவேப்பிலையும் போட்டு அதை சூடான
சாதத்தில் போட்டு சிறிது உப்பு சேர்த்து சுடச் சுட சாப்பிட்டால்
அடிவயிறுவலி, மேல் வயிறுவலி தீரும்.
வாரத்தில் ஒரு முறை கட்டாயமாக
வாழைப்பூவைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் அதிகஅளவு
விருத்தியடையும். மருதோன்றிப் பூவை எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து
தைலமாக காய்ச்சி உடலுக்கு பயன்படுத்தினால் உடல் சூடு குறையும். நல்ல
தூக்கம் வரும் நீடித்த தலைவலிகள் நீங்கும்.
பல் ஈறு வீங்கிக்
கொண்டு வலிக்கிறதா? படிகாரத்தை சிறிது தூளாக்கி வெந்நீரில் போட்டு வாயைக்
கொப்பளித்தால் வலி நின்றுவிடும். தொண்டை வலி, ஜலதோஷம் குணமாக துளசியுடன்
கருப்பட்டியும் சேர்த்து கஷாயம் தயாரித்து குடிக்கவும். அதீத தலைவலி
இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்க வைத்து
இறக்கி இரண்டு ஸ்பூன் காப்பி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு
உடனடி நிவாரணம் கிடைக்கும். வாய்ப்புண் இருந்தால் வயிற்றிலும் புண்
இருக்கலாம். தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய்ப் பாலில் தேன்
விட்டு சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
அடிக்கடி வெந்நீர்
சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்களுக்கு தலைவலி வராது. உலர்ந்த திராட்சையை
நான்கு அல்லது ஐந்து ஊறவைத்து சாறு கொடுக்க குழந்தைகளின் மலச்சிக்கல்
நீங்கிவிடும்.
Comments
Post a Comment