
கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
உடலுக்கு தேவையான அளவு தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்..
பெற்றோருக்கு இதய நோய் இருந்தால், அடுத்தத் தலைமுறைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
அவர்கள் சி
றுவயதில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
அதிகப்படியான மன அழுத்தம், பல நோய்களுக்குக் காரணம். முடிந்த வரை அழகான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
அதிகம் ஆபத்தைத் தரும் கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.
கொடம்புளியில் இயற்கை மருத்துவக் குணங்கள் அதிகம். இதை அன்றாட உணவில்
பயன்படுத்தலாம். இதைச் சாப்பிட்டால் அலர்ஜி நீங்கும். கொலஸ்ட்ரால் மற்றும்
ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
அரிசி உணவை முற்றிலும் தவிர்க்காமல், மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.
தேவையில்லாமல் உணவை வயிற்றினுள் திணிக்கக்கூடாது. உடலுக்குத் தேவையான சத்துள்ள ஆரோக்கிய உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுங்கள்.
Comments
Post a Comment