
மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.
தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக் கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.
ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.
இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால் தான் அவள் தப்பிக்க முடியும்.
இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு
குழந்தையை இறக்கி விட்டு ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.
இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண் முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது.
அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார், ''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும்
சமமானது தானே! அப்படி இருக்கும் போது எதை வைத்து ஒரு குழந்தையை பழி
கொடுக்கத் துணிந்தாய்? '' என்று.
அந்தப் பெண் கண்ணீருடன் சொன்னாள், '' என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன்.
அப்போது தான் ராணுவம் வந்தது.
பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கி விட எனக்கு அதிகாரம் கிடையாது.
அதனால் என் குழந்தையை இறக்கி விட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்.
''அந்தப் பெரியவர் கண் கலங்கினார்."
- Get link
- X
- Other Apps
Labels
stoys
Labels:
stoys
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment