மூல நோய் ஆசன வாயில் உள்ள மலக்குடலில் ஏற்படும் வீக்கம் மூலம் எனப்படும், ஆசன வாயில் எரிச்சல், அரிப்பு, நமச்சல், வலி, ஆகிய அறிகுறி தென்படும். மலமானது இறுகி சாதாரணமாக வெளியேற முடியாமல் அதனை முக்கி வெளியேற்ற முயலும் போது மலத்துடன் குருதியும் வெளிவரும். இதுவே மூலநோயின் அறிகுறிகள். மூலத்தின் வகைகள் யூகி முனிவர் சொல்படி பார்த்தால் 21 வகையான மூல பாதிப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றில் நீர்முளை, செண்டு முளை, எருவாய் முளை, சிறுமுளை, வறன் முளை, குருதி முளை, சீழ்முளை, ஆதி முளை, தமரக முளை, மழி முளை, கழல் முளை, ஐய முளை, முக்குற்றமுளை, வினை முளை, மேக முளை, குதமுளை என்பவை குறிப்பிட்ட சில மூல வகைகள் ஆகும்.
Comments
Post a Comment