Skip to main content

Posts

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும் * கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும். * நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும். * சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது. * செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும். * முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும். * வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.

நெஞ்சுவலியை விரட்டும் தேன்…! வாய்ப்புண்ணை ஆற்றும் கடுக்காய்...!!

1. நெஞ்சுவலி வந்தவுடன் ஒரு கரண்டி சுத்தமான தேன் உட்கொள்ள, வலி வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். 2. மிளகுக் கஷாயத்துடன் தேனைக் கலந்து உட்கொள்ள, அஜீரணம் குணமாகும். 3. குழந்தைகள் சளி, ஜலதோஷத்தால் அவதிப்பட்டால் மாதுளம் பழச்சாறுடன், சிறிது தேனைக் கலந்து கொடுக்கவும். 4. குப்பைமேனி இலையின் சாறுடன், தேனைக் கலந்து கட்டிகளின் மீது தடவினால், கட்டிகள் உடைந்து குணமாகும். 5. நெருப்பு காயத்திற்கு தேன் உகந்தது. 6. உணவு உண்டவுடன் ஒரு கரண்டித் தேன் அருந்தினால், உடல் சீராக இருக்கும். உடல் பருக்க இரவு படுக்குமுன், பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய சுவாரஸ்யமான பொது அறிவு தகவல்கள்...!

* ஒட்டகசிவிங்கியின் நாக்கு கரு நீல நிறத்தில் இருக்கும். * புலிகளின் ரோமங்களில் இருக்கும் கோடுகள் போல அதன் தோலிலும் கோடுகள் இருக்கும். ஒரு புலிமீது இருக்கும் கோடுகள் போல வேறு எந்த புலிக்கும் இருக்காது. ஒவ்வொரு புலிக்கும் வெவ்வேறு அமைப்பில் தான் கோடுகள் இருக்கும். * யானைகளால் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் தண்ணீரை முகர முடியும். * ஆமைகளின் பாலினத்தை அது எழுப்பும் ஒலியை வைத்து வித்தியாசப்படுத்தலாம். * கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதை போல, நாய்களின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம். * எறும்புகள் தூங்குவதே இல்லை.

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்.

* ஆய்வு ஒன்றில் ஏலக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ஒருசில புற்றுநோய்களையும் அழிக்கும் வல்லமை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. * உணவு உண்ட பின் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், செரிமானம் மட்டுமின்றி, வாய் துர்நாற்றமும் நீங்கும்.ஏலக்காய் வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, வாய் அல்சர் மற்றும் தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றுக்களை குணமாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். * ஏலக்காய் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் குணம் கொண்டது. மேலும் இது நுரையீரல் அழற்சி மற்றும் இருமல் போன்றவற்றையும் குணமாக்க உதவும்.நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், ஏலக்காய் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

இயற்கை மருத்துவம்

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் ""நெல்லிக்கனி."" 2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"". 3) மூட்டு வலியை போக்கும் ""முடக்கத்தான் கீரை."" 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் ""அரைக்கீரை.""

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும். தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும். தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும். முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும். சிறுகீரை: நீர்கோவை குணமாகும். வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும் புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.