Skip to main content

Posts

Recent Post

Kathai Sollukiren Vanga Youtube Channel

முருங்கைக்கீரை பருப்பு குழம்பு

முருங்கைக்கீரை பருப்பு குழம்பு என்னென்ன தேவை? முருங்கைக்கீரை - 1 கட்டு தனியா, சீரகம் - தலா 2 டீஸ்பூன் தேங்காய் - 2 சில்லு துவரம்பருப்பு - 1 டம்ளர் விளக்கெண்ணெய், மஞ்சள்தூள் - தலா 1 டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க சின்ன வெங்காயம் - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கு எப்படிச் செய்வது? முருங்கைக்கீரையை ஆய்ந்து வைக்கவும். தனியா, சீரகம், தேங்காய் இவற்றைச் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அரைக்கவும். துவரம் பருப்புடன் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய், மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். பருப்பு வெந்ததும், கடையவும். பருப்பை அடுப்பில் வைத்து, அதில் சுத்தம் செய்து வைத்திருக்கிற முருங்கைக்கீரையைச் சேர்த்து வேகவிடவும். அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். சிறிதளவு நல்லெண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, கொதிக்கும் கீரையில் சேர்த்து இறக்கவும்

ஒரு நிமிடக் கதை- சிரிப்பொலி

நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது. ‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான். சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன். மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது. ‘சே....இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே’ என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம்...

வாழ்நாளை நீட்டிக்கும் முட்டைகோசு

நாம் உண்ணக்கூடிய உணவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்ககூடிய காய்கறிகளில் 'முட்டைகோசு' முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் இதை உணவில் அளவோடு பயன்படுத்தி வர நமக்கு கிடைக்கும் பயன்களோ ஏராளம். முதலில் இதன் பயன்களை தெரிந்து கொண்டு இதை பயன்படுத்துவதோ, வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள். இது குளிர்மண்டல பகதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறிய செடி வகையைச் சார்ந்தது. இலைகள் நன்றாக பெருத்து காணப்படும். இலைகள் நன்றாக சருண்டு உருண்டை வடிவில் இருக்கும். இவைதான் நாம் உண்ணக்கூடிய பகுதியாகும். வெளிப்பக்கத்திலிருக்கும் இலைகள் பச்சை நிறத்திலும், உட்பக்கத்திலிருக்கும் இலைகள் வெளிர் பச்சை நிறத்திலும் காணப்படும். பயன்கள்: இதன் குணம் குளிர்ச்சியாகும், ஆதலால் முட்டைக்கோசானது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் தன்மையுடையது. ஜலதோஷத்தினால் துன்பப்படுபவர்கள் முட்டைக்கோஸை நன்றாக  வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை இதை பயன்படுத்தினால் அத்தொல்லையிலிருந்து வெளியேறலாம். உடலை ஆரோக்கியத்துடன் வைக்க முட்டைக்கோஸில் இருக்கும் ...

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மழைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதிலும் நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் . ஒரே ஒரு கொய்யாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே அத்தகைய கொய்யாப்பழத்தை தவறாமல் தினமும் வாங்கி சாப்பிடுங்கள். மேலும் மழைக்காலத்தில் எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம். அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது. சத்துக்கள் :- கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்...

நம்பினால் நம்புங்கள் 27

*ஒரு டால்பினுக்கு உடல்நிலை சரியில்லா விட்டால், மற்ற டால்பின்கள் அதை மேலே தள்ளி, கரைக்குக் கொண்டு வந்து சேர்த்து, எளிதாகச் சுவாசிக்க உதவி செய்யும். *டால்பின் தினம் 8 மணி நேரம் வரை உறங்கும். ஆனாலும், அதன் மூளையில் பாதி மட்டுமே ஒரு நேரத்தில் உறங்கும். அதனால் டால்பின் ஒருபோதும் நினைவிழப்பதில்லை! *மனிதர்களுக்கும் டால்பின்களுக்கும் தகவல்தொடர்பு ஏற்படுத்த, இப்போது ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் பொருள், ஐபேட்! *சில வகை டால்பின்கள் தேங்காய்களை பந்து போல கேட்ச் பிடித்து விளையாடும். *தண்ணீருக்கு அடியில் எளிதாகச் சென்று இரை தேட, டால்பின்களுக்கு ஸ்பெஷலான சூப்பர் சக்தி உண்டு. எகோலொகேஷன் என்ற சோனார் வகையை இதற்காக அவை பயன்படுத்துகின்றன. *டால்பின்களுக்கு வாழ்நாள் முழுக்கவே ஒரு செட் பற்கள் மட்டுமே முளைக்கும். *முதன்முதலாக ஒரு பிங்க் வண்ண பாட்டில்நோஸ் டால்பின் அமெரிக்காவிலுள்ள லூசியானா ஏரியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. *ரிஸ்ஸோ டால்பின்களால் 30 நிமிடங்கள் வரை மூச்சு விடாமல் இருக்க முடியும். *‘கில்லர் வேல்ஸ்’ என்று அழைக்கப்படுபவை, கொலைகாரத் திமிங்கலங்கள் அல்ல... உண்மையில் அவை ஒருவகை டால்பின்களே! *ஒவ்வொ...

உடலுக்கு மருந்தாகும் தண்ணீர்

எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக அறிவிப்பு விடுகிறதோ, அப்போது நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம். இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று. இதற்கு என்ன காரணம்? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ண...

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.. வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.. மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.. கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வ...