பிரியாணி என்றாலே எல்லோரும் ஒரு பிடிபிடித்து விடுவார்கள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக எல்லோர் வீட்டிலும் பிரியாணி தான். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி இருந்தாலும் மீன் பிரியாணிக்கு என்று தனிப்பிரியர்கள் உண்டு. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடிய இந்த மீன் பிரியாணியை ஒரு முறை நீங்களும் ருசித்துப் பாருங்களேன். தேவையான பொருட்கள் மீன் - 1/4 கிலோ அரிசி - 2 ஆழாக்கு வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன் புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் தனியாத்தூள் - 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன் தயிர் - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 குழிக் கரண்டி செய்முறை * மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். * வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும். * ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். * வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். * தயிர் மற்றும் ப...
Useful Information