வளர்ச்சிதை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும், நம் ரத்தத்தில் சுரக்கும் இன்சுலீன் அளவு சமச்சீர் நிலைமையை இழப்பதால் ஏற்படுகிறது. நீரிழிவு நோய்கள் நம் உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்காமல், உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குகிறது. மேலும் நீரிழிவு நோய் அதிகமாகி ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கலக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றை பெருமளவில் பாதிக்கிறது. எனவே நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அசாதரணமாக இருந்து விடாமல் உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சிலபேர் இனிப்பான உணவுகளை சாப்பிடுவதில்லை. ஆனால் அந்த இனிப்பான சில உணவுகளில் குறைவான சர்க்கரைகள் இருப்பதால், அவைகளில் ஒரு சில